ஸ்டார் ஆப்ஸ்!

ம்ம கோடம்பாக்கத்து நடிகர்களை வைத்து ஆப்ஸ் உருவாக்கினால் அது எப்படி இருக்கும்..?

சூப்பர் ஸ்டார் ரஜினி ஆப்ஸ்: இந்த ஆப்ஸ் உங்கள் மொபைலில் இருந்தால் நீங்கள் போன் பேசும்போது ஃபாஸ்ட் ஃபார்வர்டு மோடுக்கு ஆக்டிவேட் ஆகும். நீங்கள் மெதுவாகப் பேசினாலும் கடகடவென எக்ஸ்பிரஸ் வேகத்தில் வாய்ஸ் ரஜினியின் வாய்ஸாக மாறி மறுமுனை ஆசாமிக்குக் கேட்கும். ஆனால் எந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்தால் எப்போ ஆக்டிவேட் ஆகும், எப்போ டீ ஆக்டிவேட் ஆகும் என்று மட்டும் தெரியாது. சமயங்களில் ஆப்ஸ் என்னதான் கத்திப் பேசினாலும் சைலன்டாய் இமயமலை அடிவார அமைதியோடு மௌனமாய் இருக்கும்.

உலகநாயகன் ஆப்ஸ்: இந்த ஆப்ஸ் ஆக்டிவேட் செய்த அடுத்த நொடி நீங்கள் உதட்டைக் குவித்தால் போதும் ‘லிப் லாக்’ சவுண்டை டப்பிங்காகக் கொடுக்கும். உங்கள் முகத்தைப் பல போட்டோஷாப்களில் உட்படுத்தி விதவிதமான கெட்-அப்புகளில் காட்டும். ஜன்னலுக்கு வெளியே உள்ள காட்சிகளைத் துல்லியமாகப் படம் பிடித்து உங்களுக்குக் காட்டுவதால் இதை போட்டோகிராஃபி ஆர்வம் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தலாம்.

விஷால் ஆப்ஸ்: இந்த ஆப்ஸ் இருந்தால் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலிருந்தும் சென்னைக்கு பஸ் ரூட் ஷார்ட் கட்டில் சொல்லும். கூடவே ரௌடிகள் அதிகம் வாழும் ஊர்களையும் சதவிகிதத்தோடு காட்டும். இந்த ஆப்ஸ் உள்ள மொபைல் எந்த ஏரியா டவர்களில் இருக்கிறதோ அந்த ஊரின் பெருமை பேசும். உதாரணமாக பாப்பிரெட்டிபட்டி செல்போன் டவர் ரேஞ்ச் ஏரியாவில் ‘நானும் பாப்பிரெட்டிபட்டிக்காரன் தான்டா!’ என காட்டுக்கத்து கத்தும்.

சூர்யா ஆப்ஸ்: இந்த ஆப்ஸ் தமிழ்நாட்டின் பிரமாண்டமான ஷோரூம்கள், துணிக்கடைகளை பட்டியல் போட்டு கூகுள் மேப்போடு தெளிவாய் 360 டிகிரி விர்ச்சுவல் போட்டோக்களோடு காட்டும். 100 விதமான பூக்களின் பெயர்களைக் கடகடவென சொல்லும். இந்த ஆப்ஸ் பொருத்தப்பட்ட மொபைலில் ஆம்ப்ளிஃபையர் இருப்பதால், மெதுவாகப் பேசினாலும் காட்டுக்கத்தலாய் வெளியே கத்தும். ஸோ, ரப்பப்பப்பா..மெதுவா பேசுங்கப்பா.

விஜய் ஆப்ஸ்: தெறி ஆப்ஸ் இது. இந்த ஆப்ஸ் உள்ள மொபைலில் இருந்து என்ன பேசினாலும் ‘ங்ணா’ ஆட்டோமேடிக்காக சேர்த்து எதிராளிக்குக் கேட்கும். ‘அம்மா, தோசை சுட்றியாமாங்ணா!’ என மொக்கை கொடுக்கவும் செய்யும். இந்த ஆப்ஸ் இன்ஸ்டால் செய்தால் இரைச்சல் கொடுத்தால் ‘சைலன்ஸ்’ எனக் கத்தி எல்லோரையும் பயமுறுத்தும். அதனால் மார்க்கெட் பக்கம் கொண்டுபோக வேண்டாம்.

அஜீத் ஆப்ஸ்: இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்தால் மொபைலில் இருந்து பிரியாணி வாசம் அடிக்கும். தமிழ்நாட்டில் எங்கெங்கு பிரியாணி கிடைக்கிறது என்ற கூகுள் மேப்போடு 360 டிகிரி விர்ச்சுவல் படங்களோடும் நாக்கில் எச்சில் ஊற வைக்கும். நிறைய மோட்டார் ரேஸ் வீடியோ கேம்ஸ்கள் ஃப்ரீயாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். சட்டையைக் கழட்டி நின்றாலும் சே குவேரா போல அழகாக போட்டோஷாப் செய்து கொடுக்கும். ‘எது?’ என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். ‘அத்த்த்த்த்து..!’ என்று ஸ்பீக்கரில் கத்தும். காது அவுட்டாகும் வாய்ப்புகள் அதிகம். எச்சரிக்கை!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick