சினிமா விடுகதை!

ட்சுமி மேனன் நடித்த படங்கள்தான், இந்த வார சினிமா விடுகதைகளுக்கான விடைகள் பாஸ்!

1. யானையும், பானையுமாய் படம் முழுக்க வந்தவர். தலைவியின் பேரைச்சொன்னால் பூவாசம் வரும். அவங்க அப்பாவைப் பார்த்தா ஆசுவாசம் வரும். காட்டுக்கதைனும் சொல்லலாம். கட்டுக்கதைனும் சொல்லலாம். அந்தப் படம் என்ன படம்?

2. பஸ்ஸுக்குள்ள பாதிப்படம். பசங்களோட மீதிப்படம். சந்துக்குள்ள காதல் சொன்ன பெண்ணைப் பார்த்து ஹீரோ ஆவார் அதிர்ச்சி. இந்தப் படம் எந்தப் படம்? 

3.
தீபாவளியில் வெடித்த ஆக்‌ஷன் பட்டாசு. அஞ்சு அஞ்சா குத்தாட்டம் போட்டு ஆளை மடக்கினார். அடக்கமாகப் பாடம் எடுத்து ஆசிரியையாகவும் மிரட்டினார். இது எந்தப் படம்னு பாருங்க!

4. முத்தக்காட்சிதான் முதலில் ஞாபகத்துக்கு வரும் படம். கருப்பு ஹீரோ சிவப்புனு சொன்ன படம். நாயகனின் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றி அழகுபார்த்தார் ஹீரோயின். ஆனாலும் ரெண்டு பேரும் மாறி மாறித் தூங்கின படம், என்ன படம்?

5. மருத்துவ மாணவி, மங்களகரமான டைட்டில், ஒரு தாத்தா, வெத்தா கெத்தானு கேட்ட கதை. அழகு அம்மணியைக் கிழவினு சொன்ன படம். என்ன படம்?

6. மதுரை ஸ்பெஷல் படம். ஹீரோ ரெளடி, ரெளடி ஹீரோ ஆகும் கதை. கிணத்தடியில் வடை சுடுவார். ஹீரோவைப் பார்த்து லுக் விடுவார். சேலை திருடியதைத் தவிர பெரிய வேலை இல்லை. ஆனால், அம்மணி இல்லைன்னா ஒரு ட்விஸ்ட் இல்லை. இது எந்தப் படம்?

7. படத்துக்கு யானையோட பேரு. கதையில ராம்நாடுதான் ஊரு. வேட்டியை மடிச்சுக்கட்டுன மாமனை வெட்கத்தோட பார்த்த புள்ள. வறுத்த மீனோட அப்பாவுக்குச் சரக்கு ஊத்திக்கொடுத்த புள்ள. பதில் சொல்லுங்க பாஸ்!

8.
சமத்தான ‘தமிழு’ தங்கச்சியாய் தெறிக்கவிட்ட படம். உப்பு - மிளகு ஹீரோவுக்கு ஈக்குவலா நடிச்ச படம். அண்ணானு ஆயிரெத்தெட்டு தடவை சொன்னார். வில்லன்கிட்ட இருந்து தப்பிக்க அசராம நின்னார். இதென்ன படம்?

விடைகள்:

1.கும்கி, 2.சுந்தரபாண்டியன்  3.பாண்டியநாடு  4.நான் சிகப்பு மனிதன் 5.மஞ்சப்பை, 6.ஜிகர்தண்டா  7.கொம்பன், 8.வேதாளம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்