'ட்ரெண்ட்' பெட்டி!

ஊழலால் கட்டப்படும் கட்டடங்கள்

கொல்கத்தாவில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மேம்பாலம் ஒன்று கடந்த வாரம் அப்படியே நொறுங்கி விழுந்தது. 24 உயிர்களைப் பலியாக்கிய இந்தக் கோர சம்பவத்தில் 80-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அங்கு வேலை செய்த எட்டு அதிகாரிகளைக் கைதுசெய்து, தற்போதைக்கு பிரச்னையை மூடி இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் அரசியல் லாபங்களுக்காக அறிக்கைகளை தாக்கல் செய்துவிட்டனர். #kolkattakillers என்பது ட்ரெண்ட் அடித்தாலும், கொலை செய்தவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. பாரத் மாதா கீ ஜெய்!

கேமநகூ வெல்லுமா?

நெட்டிசன்ஸ் பெரும்பாலும் உடன்பிறப்புகளாகவோ, ரத்தத்தின் ரத்தங்களாகவோதான் இருப்பார்கள். தற்போது பலர் கேமநகூ என்கிற கேப்டன் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள். கேப்டன் பேசாமல் இருப்பதும், வைகோ தொடர்ந்து பேசுவதும்தான் தற்போதைய மக்கள் நலக் கூட்டணியின் பிரச்னை. #ThisTime4MNK என்ற டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் அடிக்க வைத்து மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவாக ட்விட்டினர். ஒருவேளை ஜெயிச்சுடுமோ?

வேற லெவல் ஏப்ரல் ஃபூல்

கூகுள், சாம்சங் மாதிரியான பெரிய நிறுவனங்கள் இந்த முறை வேற லெவலில் உலக முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடினார்கள். யூடியூபில் அது தொடர்பாக வீடியோக்கள் அப்லோடினார்கள். பார்ப்பவர் களை உண்மைதானோ என நம்பவைக்கும் அளவுக்கு பல வீடியோக்கள் இருந்தன. அதில் லெக்ஸஸ் என்ற வாகன நிறுவனம் செய்ததெல்லாம் ரொம்ப மோசம். நாம் காரில் பயணிக்கும்போது, நம்மைப் பாதுகாக்க சீட் பெல்ட் அணிவோம். அதற்குப் பதிலாக அவர்களது புது வெல்க்ரோ டெக்னாலஜியின் மூலம் சீட்டினை நாம் அணியும் ஆடையோடு ஒட்டிக்கொள்ளும் முறையில் பிரத்யேகமான மாடல், வித்தியாச ஆடைகள், சீட் என வீடியோ ஒன்றை வெளியிட்டு அசரடித்தனர். செம வைரலான வீடியோ நான்கு லட்சத்துக்கும் அதிகமாக ஹிட்ஸ் அள்ள #lexus ட்ரெண்ட் ஆனது. ஒட்டிக்கோ...ஓட்டிக்கோ!

நீ கலக்கு புள்ள

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்