கண்ணொடு காண்பதெல்லாம்...

‘ஜீன்ஸ்’ படத்தில் வரும் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாட்டில் கம்ப்யூட்டர் உதவி மூலம் இன்னொரு ஐஸ்வர்யா ராயின் உருவத்தை ஆடவைத்து, நாசர் குடும்பத்தினர் கண்களில் விரலை விட்டு ஆட்டுவார்களே அந்த டெக்னாலஜியை மெய்யாலுமே மைக்ரோசாஃப்ட் நிறுவத்தினர் ‘ஹோலோபோர்டேஷன்’ என்ற பெயரில் கண்டுபிடித்துவிட்டார்கள். இதில், யாருடைய ஹோலோகிராஃப் உருவத்தை நாம் காணப் போகிறோமோ அவர் இருக்கும் இடத்தில் அவரைச் சுற்றிலும் முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமராக்களில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் பதிவாகி மற்றொரு இடத்தில் தத்ரூபமாக முப்பரிமாணத்தில் அவரது உருவம் அதே அசைவுகளோடு ப்ரொஜெக்டர்கள் மூலம் ரிப்ளை ஆகும். சிம்பிள்.

அதேபோல் இதை ரெக்கார்டு செய்து மீண்டும் நீங்கள் போட்டுப் பார்க்கலாம். உருவத்தை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ மாற்றம் செய்யலாம். சூப்பரா இருக்குல்ல... இதுபற்றி தற்போதைக்கு ஒரு வீடியோவை மட்டும் வெளியிட்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், எப்போது இதை மக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடும் என்பது தெரியவில்லை. ஆனால், சீக்கிரமே வெளியிட்டுவிடுவார்கள் எனவும் விலை 2,000 யூரோக்கள் வரை இருக்கலாம் எனவும் தகவல். வந்தால் நம் ஊரில் அந்த ஹோலோகிராஃப் உருவங்களுக்குப் பேய் பிடிப்பது மாதிரியான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் உருவாக நிறையவே வாய்ப்பு இருக்கு. சொல்லிட்டேன்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick