உடைச்சு உடைச்சு விளையாடலாமா?

ந்தியாவில் கிரிக்கெட் எப்படியோ ஜப்பானில் சுய்காவரி விளையாட்டும் அப்படித்தான், செம ஃபேமஸ்!

‘பேரே வித்தியாசமா இருக்கே, என்னய்யா அந்த விளையாட்டு?’னு கேட்கிறீங்களா? பெரிசா ஒண்ணும் இல்லை பாஸ், தர்ப்பூசணிப் பழத்தைத் தரையில வெச்சு ஒரு பெரிய கம்பை எடுத்து அதை அடிச்சு துவம்சம் பண்ணினா அதுதான் சுய்காவரி. வெயில் காலம் வந்தாலே ஜப்பானில் சுய்காவரி ஃபீவர் ஸ்டார்ட் ஆகிடும்.

காலையில இருந்து கண்டதையும் தின்னுட்டு அது செரிக்க சாயந்தரம் ஆனதும் சுய்காவரி விளையாடுறாங்க. குறிப்பா மேற்கு டோக்கியோவுக்குப் பக்கத்துல இருக்கும் ஒகுடமாங்கிற இடத்துல சுய்காவரி விளையாட தினமும் பெருங்கூட்டம் கூடுது. அந்த இடம் முழுக்கத் தர்ப்பூசணியும் கையுமாவே ஆட்கள் சுத்தி வர்றாங்க. இது தவிர வருஷா வருஷம் சுய்காவரியை ஒரு திருவிழாவாவாகக் கொண்டாடி ஜப்பான் மக்கள் ஜாலியா இருக்காங்க.

ஆனாலும் இதுக்கு சில ரூல்ஸ் இருக்கு பாஸ். முதல்ல கண்ணைக் கட்டி விடுறாங்க, அடுத்து தர்ப்பூசணிப் பழத்தை மண்ணுல படாம பெட் ஷீட், காக்கி அட்டை மாதிரி ஏதாவது ஒண்ணை விரிச்சு அது மேல அலுங்காம குலுங்காம வைக்கிறாங்க. இப்போ கம்பு, குச்சி, துடைப்பம்னு கையில எது கிடைக்குதோ அதை வெச்சு உடைக்கலாம். ஆனா அந்த கம்பு ஒரு மீட்டர் நீளமாவும் ஐந்து சென்டிமீட்டர் அகலமாகவும் மட்டும்தான் இருக்கணும். இல்லேன்னா நீங்க எலிமினேட்தான் (என்னய்யா ரூல் இது!). அதிகபட்சமா மூணு நிமிஷத்துல பழத்தை உடைச்சிடணும். கிட்டத்தட்ட நம்ம ஊர் பானை உடைக்கும் போட்டி மாதிரிதான் இதுவும்.

இந்த விளையாட்டைப் பாதுகாக்க ஜப்பான் சுய்காவரி அசோசியேஷன் அப்படின்னு ஒரு அமைப்பே இருக்குனா பார்த்துக்கோங்க. 1991-ம் வருஷத்தில் இருந்து இந்த அமைப்பு ஆக்டிவா இருக்கு. நல்லா வருவீங்க பாஸ்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick