ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

‘5 நிமிடத்துல முடிச்சிடுறேன்!’, ‘5 நிமிடத்துல வந்துடுறேன்!’னு உலகத்துல எத்தனையோ விஷயங்களுக்கு ‘5 நிமிடம்’ டயலாக்கைப் பயன்படுத்தியிருக்கோம். எதற்கெடுத்தாலும் 5 நிமிடத்தைச் சொன்னாலும், அது ஐந்து நிமிசத்துல முடிஞ்சுடுதா என்ன? ம்ஹூம்! சரி... இதுக்கு என்ன வழி? நம்மை நாமே கன்ட்ரோலா வெச்சுக்கிறதைத் தவிர வேற ஒரு வழியும் கிடையாது! அந்த சுயக் கட்டுப்பாட்டைச் சொல்லிக்கொடுக்காம, நிகழ்த்தியே காட்டுறதுக்குதான் ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது ‘5-இன்’ என்ற அப்ளிகேஷன். இதோ, அஞ்சே நிமிசத்துல விளக்கிடுறேன்!

சீரியஸாக வேலை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், ஐந்து நிமிடம் ரிலாக்ஸாக ஃபேஸ்புக்கைப் பார்க்கலாம். வாட்ஸ்-அப் சாட்டிங்கில் பேசலாம். ட்விட்டரில் மேயலாம் எனத் தோன்றுவது இயல்புதான். ஆனால், சமூக வலைதளங்களில் புகுந்துவிட்டால் நமக்கேது நேரம் காலம்? இதைத் தடுக்க வேண்டும். முக்கியமான ஒரு செய்தியையோ அல்லது தகவலையோ ஐந்தே நிமிடத்தில் திரட்டித் தருகிறேன் என சபதம் போட்டுவிட்டீர்கள். ஐந்தே நிமிடத்தில் அந்த வேலை முடிய என்ன செய்வீர்கள்? ஆனால், செய்ய வேண்டும். அர்த்த ராத்திரியில் மொபைலைப் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, தூக்கம் கண்ணைக் கட்டுகிறது. ஐந்து நிமிடம் ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு தூங்கிவிடலாம் என நினைக்கிறீர்கள். ஒரு பாடல் முடிந்ததும், அடுத்த பாடலுக்கு மனசு ஏங்கும். ஆனால், பாட்டைக் கேட்காமல் தூங்கியே ஆக வேண்டும்! இப்படி, நம்முடைய நேரத்தைத் தாறுமாறாக விழுங்கும் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்க உங்கள் சுயக்கட்டுப்பாட்டால் மட்டுமே முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்