கண்டபடி கலாய்க்கிறாங்களாமாம்!

ணையவெளி எங்கும் PRANKS எனப்படும் கேன்டிட் வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஒருவரைப் பயமுறுத்தி இன்பம் காணும் இந்த வீடியோக்களில் சில பல சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. அவற்றுள் அச்சில் ஏற்ற முடிந்த ப்ராங்குகளின் லிஸ்ட்..!

ஒரு திங்கட்கிழமை காலை பரபரவென அலுவலகத்துக்குள் என்ட்ரி கொடுத்து உங்கள் கம்ப்யூட்டரை ஆன் செய்து உங்கள் இருக்கையில் உட்காருகிறீர்கள். உங்கள் சிஸ்டம் லோடு ஆகும் முன்பே பலான படத்தின் முக்கல் முனகல் ஒலி உங்களுக்கேத் தெரியாமல் கணிணியின் ஸ்பீக்கரில் இருந்து ஹைபிட்ச்சில் கேட்க ஆரம்பிக்கிறது. வால்யூமை நீங்கள் குறைத்தாலும் அந்த ஆபாச ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. நீங்கள் நிராயுதபாணியாக அசடு வழிந்து கம்ப்யூட்டருக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்தாலும் அந்த ஒலி நிற்கவில்லை. உங்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்? அதிலும் பெண் அலுவலக ஊழியர்கள் உங்கள் முகத்தைப் பார்க்கும்போது உங்கள் முகம் எப்படி இருக்கும்?

மேலே சொன்னது யூ டியூபில் நாம் பார்த்த ஹிட்டான டெரர் ப்ராங்க் எனப்படும் கேலி வீடியோக்களில் ஒன்று. அலுவலக நண்பர் ஒருவர் செய்த வினோத ப்ராங்க் சேட்டை இது. சம்பந்தப்பட்ட ஆளுக்கே தெரியாமல் மைக்ரோ ஸ்பீக்கரை கம்ப்யூட்டருக்குள் வைத்து அதற்கான இணைப்பை பக்கத்தில் இருக்கும் அந்த ஆசாமி தன் கம்ப்யூட்டரில் இருந்து இயக்கி ஆளைப் பயமுறுத்தி இருக்கிறார்.

இணையத்தை உலுக்கும் இன்னொரு வகையான ப்ராங்க் ரொம்பவே டார்ச்சர் ரகம். ‘டாய்லெட் ப்ராங்க்’. ஷாப்பிங் மால்களில் இருக்கும் கழிவறைகளில் பொதுவாக கால்கள் மட்டும் தெரியும் வண்ணம்  டாய்லெட்டுகள் மிக நெருக்கமாக இருக்கும். உள்ளே உட்கார்ந்திருக்கும் நபர்களை இடுக்குகளின் வழியே பெட்ரோல் கேனில் இருக்கும் திரவத்தை (தண்ணீரை) உள்ளே ஊற்றுவார்கள். லைட்டரை இடுக்கின் வழியே உள்ளே ஒளிரவிட்டு பயமுறுத்துவார்கள். தண்ணீருக்குப் பதில் பெட்ரோலாக இருந்திருந்தால் அவ்வளவுதான். உட்கார்ந்த நிலையில் டூ பாத்ரூம் போய்க் கொண்டிருப்பவர்கள் திடீரென ஒரு கை உள்ளே வந்து இதுபோன்று செய்தால் என்ன ஆவார்கள்?

இவை எல்லாவற்றையும்விடக் கொடுமை நடிகையும் பாப் பாடகியுமான பாரிஸ் ஹில்டனை வைத்து துபாயில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் செய்த கொலவெறி ப்ராங்க்தான்.

குட்டி விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த நிறுவனம் பக்காவாக நான்கைந்து ஸ்கை டைவர்களின் உதவியோடு ஒரு போலியான விமான விபத்தை வானில் நிகழ்த்திக் காட்டினார்கள். நம்ப வைக்க அந்த டைவர்களில் ஒருவர் பயணியைப்போல உயிர் பயத்தில் பாராசூட்டுடன் குதிக்கவும் செய்ய, பாரிஸ் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டார். கீழே பத்திரமாக விமானி இறக்கிய பிறகுதான் எல்லாமே செட்-அப் என்பது மேடத்துக்குத் தெரிய வந்தது. அந்த பிராங்கை பக்காவாக செய்த ரமீஸ் கலால் துபாயில் முக்கியமான டி.வி நடிகர் மற்றும் ப்ராங்க் ஸ்பெஷலிஸ்ட். இவருக்கு இதான் வேலை!

ஏன்யா இப்பிடி?

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick