குரங்கு ஓட்டம்!

ப்பானைச் சேர்ந்த கெனிச்சி இடோ என்பவரைக் குரங்கு மனிதன் என்றுதான் எல்லோரும் கூப்பிடுகிறார்கள். இவருக்கும் குரங்குக்கும் அப்படி என்ன சம்பந்தம்னு மண்டையைப் போட்டு பிச்சிக்க வேணாம். கெனிச்சிக்கு சின்ன வயசுல இருந்தே குரங்குனா கொள்ளைப் பிரியம். டிஸ்கவரி சேனல்ல குரங்கு ஓடுவதை, தாவுவதை, குதிப்பதைப் பார்த்து அது மாதிரியே தானும் செய்து பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கங்கா சந்திரமுகியா மாறின மாதிரி கெனிச்சி முழு குரங்காகவே மாறிட்டார். உடனே ஓர் ஓட்டப்பந்தயத்திலும் கலந்துகொண்டார். ஜப்பானின் பிரபல கோமாஷவா ஒலிம்பிக் பார்க்கில் நடந்த அந்த ஓட்டப்பந்தயம் எப்படிப்பட்டதென்றால் கையையும் காலையும் உபயோகப்படுத்தி குரங்கு மாதிரியே ஓடி வர வேண்டும். மனசுல குரங்கை வேண்டிக்கிட்டு களத்தில் இறங்கிய கெனிச்சி அட்டகாசமாக ஓடி அந்த 100 மீட்டர் குரங்கு ஓட்டத்தில் உலக சாதனை படைத்து கின்னஸிலும் இடம்பிடித்து விட்டார்.

ஏற்கெனவே கட்சுமி டமகோஷினு ஒருவர் இதே குரங்கு ஓட்டத்தில் 15.86 வினாடியில் ஓடி வந்ததே சாதனையாக இருந்தது. அதை 15.71 வினாடியில் ஓடி முறியடித்திருக்கிறார். சரி, ஓடும்போது குரங்கு மாதிரி ஒகே. மற்ற நேரத்தில்... அங்கேதான் மேட்டரே. சாதாரணமா வீட்டுக்குள்ளே கூட குரங்கு மாதிரியேதான் வாழ்கிறார். அவ்வளவு ஏன் ஹெவி ட்ராஃபிக்கில் ரோட்டை க்ராஸ் பண்ணும்போதுகூட குரங்கு மாதிரிதான்  கடந்து செல்கிறார். ‘ராவணன்’ படத்துல வர்ற கார்த்திக்கை விட மோசமான ஆளா  இருக்கிறார் ப்ரோ!   

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick