விதவிதமாய் சவப்பெட்டிகள்!

ன்னதான் ஆட்டம் போட்டாலும், கடைசியில கிடைக்கப் போவது ‘ஆறடி நிலம்’னு சொல்றோம். ஆனா, செத்த பிறகும் ‘வெரைட்டி’ காட்டணும்னு நினைக்கிற உலகம் பாஸ் இது. இதோ, இந்தச் சவப்பெட்டிகளின் கதையைக் கேளுங்க!

நமக்கெல்லாம் சவப்பெட்டினா நாலாப்பக்கமும் வழிச்சுச் சீவின பலகைதான் ஞாபகத்துக்கு வரும். ஆனா, அது மட்டுமே இல்லை! தங்கத்துல, வைரத்துல, ஏன் வைடூரியத்துலகூட சவப்பெட்டி செஞ்சிக்குவாங்க பணக்காரங்க. இந்தக் கொஞ்சம் பணக்காரர், கொஞ்சம் கொஞ்சம் பணக்காரர், பணக்காரர் இவங்களுக்கெல்லாம் என்ன பண்றதாம்னு யோசிச்ச பல பேர்தான் ‘சவப்பெட்டி’யில வெரைட்டி காட்டுறாங்க. பஸ்ஸுல டிராவல் பண்ணும்போது என்ன பண்றோம்? கவர்மென்ட் பஸ், ஆர்டினரி பஸ், ஏசி, ஏன்... படுத்தேகூட டிராவல் பண்றோம்ல, அது மாதிரி சில ஆயிரத்துல இருந்து, பல லட்சம் வரைக்கும் அவங்கவங்க சக்திக்குத் தகுந்த மாதிரி சவப்பெட்டி வாங்கிக்கலாம். அல்லது இப்பவேகூட ஆர்டர் எடுத்து வெச்சுக்கலாம்!

முழுக்க மெத்தை, தலையணையோட சவப்பெட்டி, பெட்-ஷீட் வெச்சு, எம்பிராய்டரியில தெச்சு டிசைன் பண்ணின சவப்பெட்டினு அட்ராசிட்டி தாங்கலை! இன்னும் சிலர் மீன், நண்டு, சேவல், கோழி, சிங்கம், புலினு உயிரினங்களோட உருவத்துல சவப்பெட்டிகளை விற்பனைக்கு வெச்சுருக்காங்க. கார், பைக், ஏரோப்ளேன்னு ஏனைய எலக்ட்ரானிக் அயிட்டங்களிலும் சவப்பெட்டிகள் கிடைக்கின்றன. அப்படி, உலகம் முழுக்கக் கிடைக்கும் விதவிதமான சவப்பெட்டிகளின் கொஞ்சூண்டு ட்ரெய்லர் இங்கே!

இனி யாராச்சும் சொல்லுவீங்க, செத்த பிறகு ‘ஆறடி மண்ணு’தான்னு!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick