இங்கு ஆண்கள் நுழைய முடியாது!

பொதுவா கிராமத்தில் எதெல்லாம் இருக்காது? கரன்ட் இருக்காது. நேரத்துக்கு பஸ் இருக்காது. ஆனால்  கென்யாவில் ஒரு கிராமத்தில் ஆண்களே இல்லை!

இந்த அதிசயக் கிராமத்துக்குப் பெயர் உமோஜா. சம்புரு எனும் பகுதியில் மவுன்ட் கென்யாவின் அடிவாரத்தில் இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது. ரபெக்கா லோலோசோலிங்கிற பெண்தான் இந்தக் கிராமத்தின் தலைவி. அதெல்லாம் சரி... இந்தக் கிராமம் உருவாக அப்படி என்னதான் காரணம்னு கேட்கிறீங்களா? ஆண்களின் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், விவாகரத்தான பெண்கள், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் என மொத்தமாக எல்லோரும் ஒன்று கூடி 1990-ல்  உருவாக்கியதுதான் இந்தக் கிராமம். ஒரு ஆண்கூட உள்ளே வர முடியாது.
 

ங்கிருக்கும் ஜேன் என்ற பெண் ‘‘ராணுவத்தினரின் அராஜகம் இங்கு அதிகம். என்னை ராணுவவீரர்கள் பலாத்காரம் செய்தார்கள்’’ என்று கூறியிருக்கிறார். கிராமத்துத் தலைவி ரபெக்காவையும் பிரிட்டன் ராணுவத்தினர் பலாத்காரம் செய்தார்களாம். இப்படி ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதை. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பிய ரபெக்காவுக்குத்தான் தனி கிராமம் ஐடியா முதலில் வந்ததாம். இங்குள்ள மக்கள் கென்யாவின் வெவ்வேறு பகுதியில் இருந்து வந்திருந்தாலும் அவர்களுக்குள் மொழிப்பிரச்னை இல்லையாம். இந்தக் கிராமத்தில் தற்போது 47 பெண்களும் 200 குழந்தைகளும் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதி சுற்றுலாத்தலம் என்பதால் சுற்றுலாவாசிகளுக்கு கூடாரங்களை அமைப்பதாலும், விதவிதமான நகைகளை உருவாக்கி விற்பதாலும் இவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அக்கம் பக்கம் கிராமங்களில் உள்ள ஆண்கள் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து வாழ்கிறார்கள் இங்குள்ள பெண்கள். இந்தக் கிராமத்துக்கு இப்போது வயது 25. வாழ்த்துகள் பெண்களே!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick