சினிமால்!

ஜோதிகா திரும்ப நடிக்க வந்தபோதே ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆசையும் சூர்யா, ஜோதிகா இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான். ‘பசங்க 2’ படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்தும் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. தற்போது சூர்யா, ஜோதிகா இணைந்து நடிக்க நல்ல ஒரு கதை அமைந்திருக்கிறதாம். ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா சொன்ன கதை இருவருக்கும் பிடித்துப் போய்விட இருவரும் 10 ஆண்டுகள் கழித்து ரீலில் ஜோடியாகிறார்கள். நோக்க நோக்க!

அஜித் டானாக நடித்தாலே அந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள்தான் என்பது எழுதப்படாத விதி. ‘பில்லா’ வெற்றி சென்டிமென்டில் வெளிநாட்டில் படமாக இருக்கும் அஜித்தின் அடுத்த படத்திலும் இரண்டு நாயகிகளாம். அஜித் டானாக நடிப்பதால், அவருக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் ஸ்டைலான நாயகிகளாகத் தேடி வந்தாராம் சிவா. மகேஷ் பாபுவின் ‘1’ படத்தில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சனோன் பொருத்தமாக அமைய, அவரையே அஜித்துக்கு ஜோடியாக்கி விட்டாராம். இன்னொரு நாயகியாக முன்னணி நடிகைக்கு வலை வீசி வருகிறார்கள். டானுக்கெல்லாம் டான்!

இங்கிலாந்தில் இருந்து வந்தாலும் இந்திய நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறார் எமி ஜாக்ஸன். எல்லாப் பெரிய படங்களிலும் நடித்து டாப் ஹீரோயின் ஆகிவிட்டார். ‘தெறி’, ‘2.0’ படங்களை அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்திலும் நாயகி வேட்டை நடத்த, சமந்தா, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை முந்தி அந்த நாயகி வாய்ப்பை தன் வசப்படுத்தி விட்டாராம் எமி. கெத்தும்மா நீ!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்