“ஜாக்குலினைத்தான் அதிகம் விசாரிக்கிறாங்க!”

விஜய் டி.வி-யின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியை கலகலப்பாய் தொகுத்து வழங்குபவர்கள் ரக்‌ஷனும் ஜாக்குலினும். ஒரு மத்தியான நேரத்தில் ரக்‌ஷனை மடக்கிப் பிடித்து பேசியதில்...

‘‘நான் பக்கா சென்னைப் பையன் ப்ரோ. காலேஜ் முடிச்சிட்டு சினிமா சான்ஸ் தேடிக்கிட்டிருந்த நேரம். தெரியாத்தனமா ஒரு உப்புமா கம்பெனியில போய் மாட்டிக்கிட்டேன். வாய்ப்புத் தரேன்னு அவங்க கொடுத்த டார்ச்சர் இருக்கே... அய்யய்யோ. ‘தலைநகரம்’ படத்தில் வர்ற வடிவேல் காமெடி மாதிரி அவங்க என்கிட்டே இருந்த காசு எல்லாத்தையும் காலி பண்ணினாங்களே தவிர கடைசிவரை என்னை வெச்சு ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோகூட எடுக்கலை. ஃப்ரெண்ட்ஸ் சில பேர் ‘உனக்கு சினிமா வேண்டாம். உன் வாய்ஸ் சூப்பரா  இருக்கு. அதனால ஆங்கரிங் ட்ரை பண்ணு’னு சொல்லி உசுப்பேத்தினாங்க. முதல் வாய்ப்பு ராஜ் டி.வி-யில் கிடைச்சது. அப்படியே இசை அருவி, கலைஞர் டி.வி-னு ஒரு சுற்று சுற்றிக் கடைசியா இப்போ விஜய் டி.வி-யில வந்து நிற்கிறேன். விஜய் டி.வி-க்கு நான் அசிஸ்டென்ட் டைரக்டராதான் வந்தேன்.

‘சிரிச்சா போச்சு’ ரவுண்டில் சில கேரக்டர்ஸ் பண்ணினேன். ‘கலக்கப்போவது யாரு?’ ஆங்கர் செலக்‌ஷன் நடந்தப்போ ஏற்கெனவே மூணு சேனல்ல ஆங்கரிங் பண்ணின எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால அந்த வாய்ப்பு ஈஸியா கிடைச்சது. ஆரம்பத்துல கொஞ்சம்  பதட்டமாதான் இருந்துச்சு. அப்பறம் பழகிடுச்சு’’ என்று ஃப்ளாஷ்பேக் ஓட்டினார் ரக்‌ஷன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்