அடிச்சுக்கிடாதீங்கப்பா!

ம் நெட்டிசன்கள் ‘தலயா, தளபதியா?’னு மட்டும் அடிச்சுக்கிட்டு ஆக்ரோஷத்தில் ஆனந்தராஜ் மாதிரி திரியலை. வேறு சில விஷயங்களுக்கும் இரண்டு குரூப்பா பிரிஞ்சு அடிச்சுகிட்டுதான் கிடக்குறாய்ங்க. எதுக்கெல்லாம்னு சொல்றேன், கேட்டுக்கிடுங்க...
 

அனிருத்தா? சந்தோஷ் நாராயணனா?

இந்தச் சண்டையில் யார் எந்தப் பாட்டை எங்கே இருந்து காப்பி அடிச்சுருக்காங்கனு ஈஸியா தெரிஞ்சுக்கலாம். நன்றிகள் கய்ஸ்..

டோனியா? டி வில்லியர்ஸா?

டி வில்லியர்ஸ் ரசிகர்கள் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றுப்போனால் குலுங்கிக் குலுங்கி சிரிப்பார்கள். நமக்குத்தான் ‘ரட்சகன்’ நாகர்ஜூனா மாதிரி கையில் நாக்குப்பூச்சி எழுந்திருக்கும்.

பிரேமமா? ஆட்டோகிராஃபா?

‘என்ன பாஸ் பெரிய ‘பிரேமம்’. இதெல்லாம் எப்பவோ சேரன் பெல்பாட்டம் போட்டுகிட்டு பண்ணிட்டுப் போயிட்டாரு’ என்ற கருத்தில் ஆரம்பித்த சண்டை இது.

மலரா? செலீனா?

இது ‘பிரேமம்’ ரசிகர்களுக்குள் நடக்கும் உட்கட்சிப்பூசல். நல்ல வேளை மேரியை யாரும் பெருசா கண்டுக்கலை.

பல்சரா? அப்பாச்சியா?

இதுவும் பல வருஷமாவே நடந்துட்டு வர்ற பஞ்சாயத்துதான். எதுவா இருந்தாலும் நம்ம டி.வி.எஸ் 50-க்கு ஈடாகாது.

லட்சுமி மேனன் ஃபேன்ஸா? லட்சுமி மேனன் ஹேட்டர்ஸா?

இது லட்சுமி மேனனை மையப்படுத்தி நடக்கும் மோதல், லட்சுமி மேனனை உலக அழகியா நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கிற ஒரு குரூப்பும், லட்சுமி மேனனை ஹீரோயினாவே ஏத்துக்காத இன்னொரு குரூப்பும் அடிச்சுக்கிற இந்தச் சண்டை செம சுவாரஸ்யமா இருக்கும். சொய்ங்... சொய்ங்...

மெஸ்ஸியா? ரொனால்டோவா?

ஃபுட்பால் தனக்குத் தெரியும்னு காட்டிக்கிறதுக்ககவே இந்தச் சண்டை போடுவாய்ங்க. ஆமா, பாஸ் நம்ம இந்தியன் ஃபுட்பால் டீம் கோல் கீப்பர் யார்?

சிங்கிள் பாய்ஸா? கமிட்டட் பாய்ஸா?

இது உலகம் தோன்றியதில் இருந்து நடந்து வரும் யுத்தம். இதை ஒண்ணும் பண்ண முடியாது.

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick