பாவம் கேப்டன்!

கேப்டனாக இருப்பதன் துயரம் கேப்டனுக்குத்தான் தெரியும். எப்படி எல்லாம் துக்கப்படுவார், துயரப்படுவார் என்ற லிஸ்ட் இது..!

முன்னொரு காலத்தில் ‘லெக் ஃபைட்’ என்ற பெயரில் சுவற்றில் கால் வைத்து சுழற்றி அடிக்கும்போது கை தட்டிய இதே கூட்டம்தான் இன்று தன்னைக் கலாய்த்துத் தள்ளுகிறது என்பதை கேப்டன் உணர்ந்த நிமிடம்.

கோயம்பேடு பாலத்தின் அருகே இருப்பதால், போகிறபோக்கில் டைம்பாஸாக உள்ளே எட்டிப் பார்த்துச் செல்வதை அறிந்துகொண்டபோது வேதனைப்படுவாரே!

இன்று வெளியே கிளம்பினால் நம்மை வைத்து எத்தனை மீம்ஸ், எத்தனை வைரல் வீடியோக்கள் ரெடியாகும் என்ற பதட்டத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் ஒளித்து வைப்பது அவர் மட்டுமே அறிவார்.

ஏற்கெனவே வெயில் கொடுமையில் என்ன பேசுகிறோம் என்பது தனக்கே புரியாத நிலையில் இன்னும் வெயில் உக்கிரமாக அடிக்கும்போது பிரசாரம் போனால் என்னெல்லாம் உளறுவோமோ என்று பதறுவது அவருக்கு மட்டுமே தெரியும்.

‘கப்பலுக்கா...இல்லைனா கிரிக்கெட்டுக்கா அவர் கேப்டன்?’ எனக் கேட்பதாலும் கிரிக்கெட்டையும் கப்பலையும் பற்றி அப்டேட் செய்ய மெனக்கெடுவது அவருக்கு மட்டுமே தெரியும்.

‘தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க’ எனச் சொல்லிவிட்டதால் எங்காவது தூக்கி அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தன்னை நிரூபிக்க காலையில் ஜிம்மில் உடம்பை மெறுகேற்றுவது அவருக்கு மட்டுமே தெரியும்.

‘அடிக்க மாட்டேன். வாங்க’ எனச் சொல்லிப் பச்சப்புள்ள சிரிப்பு சிரித்து பத்திரிகையாளர்களை அவர் தாஜா பண்ணுவதற்கு எவ்வளவு தூரம் ‘யோகா’ செய்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

தன்னை வைத்து ஒரு குரூப்பே டைம்பாஸ் புக்கில் எழுதி  டைம்பாஸ் செய்வதைப் படித்தும் படிக்காதது போல் நடந்துகொள்ள எவ்வளவு மெனக்கெடுவார் தெரியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்