பண்ணுங்க பாண்டவாஸ்!

டிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்ட, கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளது நடிகர் சங்கம். இதேபோல் நிதி திரட்ட வேற என்னெவெல்லாம் செய்யலாம்னு நடிகர் சங்கத்துக்கு சில யோசனைகள்...

நடிகர்களுக்கிடையே நடனப்போட்டி, பாட்டுக்குப் பாட்டு போட்டி ஆகியவை நடத்தலாம். எப்படியும் அதில் சிம்பு கலந்துகொள்ள மாட்டேன் என அடம் பிடிப்பார். அதைப் படம் பிடித்துப் போட்டு டி.ஆர்.பி-யை எகிற வைக்கலாம்.

விஷால் அணியும், சரத்குமார் அணியும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம். ‘வானத்தைப் போல’, ‘சூரியவம்சம்’, ‘சமுத்திரம்’ போன்ற படங்களை ஒன்றாய் மிக்ஸியில் போட்டு அடித்துக் கதை உருவாக்கி கண் கலங்கவைத்து வசூல் அள்ளலாம்.

பீச்சில், நடிகர்களின் கட்-அவுட்டுடன் போஸ் கொடுத்து மக்கள் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அதுபோல் கட்-அவுட்டுக்குப் பதிலாக நடிகர்களே போய் நின்று மக்களோடு போட்டோ எடுத்து காசு வசூலிக்கலாம்.

கலை நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் நடனமாட மற்ற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோர் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். ஒரு மாறுதலுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை ஆடவிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டலாம்.

‘உலகமே ஒரு நாடகமேடை. அதில் மக்கள் எல்லோரும் நடிகர்கள்’ எனும் பழமொழியை முன்வைத்து, எல்லா மக்களிடமும் ‘நடிகர் வரி’ எனப் புதுவரி ஒன்றை உருவாக்கி வரி வசூலிக்கலாம்.

திருட்டு வி.சி.டி விற்பவர்களிடம் மறுபடியும் விஷாலை அனுப்பிவைத்து நஷ்ட ஈடாகவோ, அபராதமாகவோ செங்கல், சிமென்ட், மணல் ஆகியவற்றை வாங்கிவரச் சொல்லலாம்.

மல்டி ப்ளெக்ஸ் தியேட்டர்களுக்குள் நடிகர் சங்கம் சார்பாக பாப்கார்ன், சமோசா கடை போடலாம்.

நடிகர்களுக்கிடையே இரு பிரிவாய் பிரித்து ‘தலயா? தளபதியா?’ யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?’ என விவாதம் நடத்தி தமிழ்நாட்டு மக்களிடையே தக்காளிச் சட்னி அரைக்கலாம். டி.ஆர்.பி சும்மா பிச்சுக்கும் பார்த்துக்கிடுங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்