ஊர்ப்பாவம் பொல்லாதது!

மிழ் சினிமாவில் ஊர்ப் பெயரை வெச்சுக்கிட்டு நம்மாளுங்க பண்ற அட்ராசிட்டீஸ் இருக்கே... ரொம்ம்ம்ம்ப ஓவர் பாஸ்!

‘ரோஜா’ படத்துல நெல்லை மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் ஹீரோயின் ஊரு. ‘எங்க ஊரு பொண்ணுக்குப் பயம்லாம் கிடையாது. அச்சம் எதுவும் கிடையாது’னு பில்ட்-அப் கொடுப்பாரு ஹீரோ அர்விந்த் சுவாமியின் சீனியர் அதிகாரி. ஒரு வெள்ளைப் பணியாரத்துக்கு இவ்வளவு பில்டப்பா?

‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் க்ளைமாக்ஸ்ல இருக்கிறதுலேயே கொடூரமான ஊருக்கு பனிஷ்மென்ட்டா ஹீரோவை அனுப்பி வைப்பாங்க. வேற எங்கே... ராமநாதபுரம்தான் பாஸ்! என்னங்கய்யா பண்ணாங்க அவங்க?

இப்போவெல்லாம் எல்லா ஊர்லேயும் அருவா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க பாஸ். ‘திருப்பாச்சி’ படத்துல அந்த ஊர்தான் அருவாவை ஹோல்சேல்ல உலகத்துக்கே பார்சல் பண்ற மாதிரி அம்புட்டு பில்ட்-அப் கொடுப்பாரு நம்ம தளபதி.

மதுரைன்னதும் ‘கில்லி’ படம் ஞாபகத்தில் வந்து போகுமே? ‘மதுரையே முத்துப்பாண்டி கோட்டைடி’ என்பார் பிரகாஷ்ராஜ். கபடி விளையாட மதுரை போய் இறங்கினாலே, ‘இது மதுரை. உங்க வால்தனங்களை மறந்துட்டு ஆட்டத்தை மட்டும் ஆடுங்க. இல்லைனா வெட்டி சாய்ச்சிருவாங்க’ என பில்ட்-அப் ஏற்றி பயம் காட்டுவார் கோச். ஏன்யா ஏன்?

‘அட்டகாசம்’ படத்துல தூத்துக்குடி குருவா நம்ம தல நடிச்சிருப்பார். ‘சோத்துல உப்புப் போட்டு திங்கிறியாலே... அந்த உப்பு எங்க ஊருல இருந்துதான்லே வருது!’ என ஆனா ஊனா உப்பை வெச்சே தப்பாம பன்ச் பேசுவாரு. முடியலை மக்கா.

‘ஆதிடா...காசிமேடு ஆதிடா!’ என ‘சிவாஜி’ வில்லனில் ஆரம்பித்து பல படங்களில், ‘காசிமேடுல பெரிய கை அவர்’ எனப் பத்து டஜன் படங்களில் வில்லன்களுக்கு பில்ட்-அப் ஏற்றுவார்கள். உண்மையில் கேரம் போர்டு விளையாடிக்கொண்டு சமர்த்தாய் மீன் பிடிப்பார்கள் ஏரியாவாசிகள். பாவம்யா!

‘மதுரைக்காரன் என்னிக்கிடா தண்ணி ஊத்தி சரக்கடிச்சிருக்கான்?’ என வெட்டி பந்தா காட்டி  கோமணத்தோடு கிடப்பார் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஒரு  செக்யூரிட்டி!

‘உசிலம்பட்டியில பெரிய தலைகட்டுதான்’ என கித்தாப்பு காட்டுவதாகட்டும், ‘எங்க பொண்ணுங்க மனசை காதல், கீதல்னு கலைச்சா இந்தக் காட்டுக்குள்ள கொன்னு புதைச்சிடுவோம்!’ என ஆணவ பந்தா காட்டுவதிலும் ‘சுந்தரபாண்டியன்’ படம் ரொம்பவே ஓவர் பாஸ்!

‘ஏனாதி, அரசனூர், ராணிமங்கலம்’ போன்ற ஊர்களை ‘களவாணி’ விமல் மூலம் அடிக்கடி சொல்ல வைத்து ஊர்ப்பாசம் காட்டினாரே சற்குணம்!

நாட்டரசன்கோட்டை, சிவகங்கை ஜில்லா, மதுரை அனுப்பானடி, சிவகாசி, திருப்பாச்சி என எத்தனைப் படங்கள்ல ஊர்களுக்கு வக்காலத்து வாங்கினாரு நம்ம பேரரசு!

‘அந்த சிவகாசி வெடி தயாரிக்கிற இடம்... இந்த சிவகாசி வெடிக்கிற இடம்!’ எனத் தன் பெயருக்கு விளக்கம் கொடுத்து லைக்ஸ் அள்ளுவாரே ‘சிவகாசி’ விஜய்ணா!

‘திருநெல்வேலியை ரொம்பப் பிடிக்கக் காரணம் பொண்ணுங்க. இந்த ஊர்ப் பொண்ணுங்க குடை எடுத்துட்டுப் போறதுகூட அருவா எடுத்துட்டுப் போற மாதிரியே இருக்கும்’ என வெட்டி பில்ட்-அப் கொடுப்பாரு நம்ம ‘சாமி’ விக்ரம்!

ஆனா ஊனா தாமிரபரணி தண்ணி குடிச்சவன், சிறுவாணி தண்ணி குடிச்சவன், தென் மதுரை வைகை நதியில தமிழ் படிச்சவன், காவிரியில கால் நனைச்சவன்னு எக்கச்சக்க எகனை மொகனைகள். ஏன்யா ஏன்? இதெல்லாம் அந்தந்த ஊர்ல அவனவன் செய்றதுதானே?

‘அதாங்ணா கோயம்புத்தூர் குசும்பு’, ‘பொண்ணு அமெரிக்கா- பையன் அமிஞ்சிக்கரை’, ‘இதுக்கு வியாசர்பாடி வால்பசங்களை அனுப்பி ஆளைத் தூக்கு’, ‘மைலாப்பூர் மாமி’ , ‘கும்பகோணம் சாம்பு மாமா’ என நேட்டிவிட்டியிலே நெத்தியிலேயே அடிக்கிறீங்களே...!

பாவம் பாஸ் நாங்க!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick