கிளாமர் பேய்கள்!

பேய் படத்துல கிளாமர் இருக்கலாம். ஆனா பேயே கிளாமரா இருந்தா எப்படி பாஸ். பேய்கள் எந்தெந்த படங்களில் இப்படி கிளாமரா சுற்றித் திரிஞ்சிருக்குனு ஆராய்ச்சி செய்ததில்...

‘அரண்மனை’ படத்தில் இதுதான் பேயானு கேட்கிற அளவுக்கு செம ஹாட்டான பேயா நடிச்சிருந்தாங்க ஆண்ட்ரியா. ‘ஆம்பளைனா தப்பு பண்ணுவீங்களாடா’னு கேட்டு வில்லன்களைப் போட்டு பொளந்து கட்டினாங்க. கடைசியா சுந்தர்.சி சில தில்லாலங்கடி வேலைகளை செஞ்சு பேயை ஓட்டுவார்.

‘அரண்மனை-2’ கேட்கவே வேணாம். ஆண்ட்ரியாவுக்குப் பதில் த்ரிஷா. ஆண்ட்ரியா அளவுக்கு இல்லைனாலும் இவங்க வேற மாதிரி பண்ணியிருந்தாங்க. முதல் பாதி கிளாமர் காட்டி இரண்டாம் பாதி பேயா பின்னியிருந்தாங்க. பேய் இம்புட்டு அழகா இருந்தா எப்படி பாஸ் பயம் வரும்?

‘சவுகார் பேட்டை’ இது ஒரு பேய் படம்னு தியேட்டருக்குப் போனவங்களை விட ட்ரெய்லரில் ராய் லட்சுமியைப் பார்த்துட்டு டிக்கெட் ரிசர்வ் பண்ணினவங்க அதிகம். அந்த அளவுக்கு கிளாமரை வாரி இறைச்சிருந்தாங்க. பேய் கலர் சேலை கட்டினா எம்புட்டு அழகா இருக்கும்னு நான் இந்தப் படத்துலதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுவும் அந்தப் படிக்கட்டுல நடந்து வர்ற சீன்... சான்ஸே இல்லை. பத்து நிமிஷம்கூட பார்க்க முடியாத ரொம்ப ரொம்ப சுமாரான இந்தப் படத்தை மூணு மணி நேரம் பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பார்த்தது ராய் லட்சுமிக்காக மட்டும்தான். போஸ்டரைப் பார்த்துப் படத்துக்குப் போனவங்க எல்லோரும் கையைத் தூக்குங்க.

கொஞ்சம் பின்னோக்கிப் போனா, ‘மனைவி ஒரு மாணிக்கம்’னு அர்ஜுன் நடிச்ச படம் கண்ணு முன்னால வந்து போகுது. ஹீரோயின் ராதா உடம்புக்குள் ஆவி புகுந்திருக்கும். அது ஒரு பாம்பு ஆவி. சாமியார் ராதாரவி பாம்பா இருக்கும் பப்லுவைக் கொன்று ஹீரோ முகேஷுக்கு அந்த உயிரைக் கொடுத்திருப்பார். பப்லுவின் ஜோடிப் பாம்பு செத்த உடம்புக்குத் திரும்ப உயிர் கொடுக்க, ராதாவின் உடம்புக்குள் ஆவியா புகுந்து ரணகளப்படுத்தும். இதுதான் பாஸ் கதை. பாம்புதான் பேயா வந்திருக்குனு சிம்பாலிக்கா காட்ட ராதா கண்ணுக்கு ப்ளூ லென்ஸ் மாட்டி விட்டுருப்பாங்க. அவ்வளவுதான். அந்தப் பாம்புகூட அவ்ளோ இருக்க முடியுமா? அவங்க ஸ்டைல்லையே சொல்லணும்னா அடி தூள்.

அதே மாதிரி விட்டலாச்சாரியார் எடுத்த பழைய ‘ஜெகன் மோகினி’ ஜெயமாலினியா இருக்கட்டும். என். கே. விஸ்வநாதன் எடுத்த புதிய ‘ஜெகன் மோகினி’ நமீதாவாகட்டும், ரெண்டு பேரும் போதும் போதும்னு சொல்ற அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தாங்க.

அழகான பேய்களுக்கு வெல்கம்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick