சினிமா விடுகதை!

ர் ஊராப் போய் ரௌடிகளை அழிக்கும் அசைன்மென்ட்டை சின்ஸியராய் செய்யும் விஷால் நடித்த சினிமாக்கள்தான்  இந்த வார சினிமா விடுகதைக்கான கேள்விகள்?
 
1. குழந்தைகளைக் கொஞ்சுற வார்த்தை. கொல்கத்தா ரசகுல்லா ஜோடி. காதல் பையன் வில்லனா நடிச்ச படத்துல மும்தாஜ் மும்தாஜா வருவாங்களே..! அது என்ன படம்?

2. கேரளத்து ஆட்டம் போட்டு கடலூர்ல கொட்டத்தை அடக்குவார் ஹீரோ. அவருக்கு ஜோடியா மீனுக்குட்டியா நடிச்சது யாரோ? நாலெழுத்துப் படத்துல ‘பசங்க’ளுக்கு என்ன வேலை?

3. மன்னர் பேர் சொல்லும் தலைப்பு. ஒத்தக்கடைனு சொல்ல வெச்ச நட்பு. முரட்டு ராசா நடிச்ச படத்துல ஹீரோவுக்கு டீச்சரம்மா ஜோடி. என்ன படம் அது?

4. ரஜினி டைட்டில்னு சொன்னா ஈஸியா புரியும். கருப்பு ஹீரோ தன்னை சிகப்புனு சொன்னா இன்னும் தெரியும். தூங்குற ஹீரோவை வெச்சு ஆக்‌ஷன் பண்றதுக்கும் தில் வேணும். என்ன படம் பாஸ்?

5.
போரை இப்படியும் சொல்லலாம். மூன்றெழுத்து சினிமாவில் ரெண்டு வில்லன்கள். நாடு விட்டு நாடு போன பரமபதக் கதையில் நம்பர் நடிகையும் உண்டு. அது என்ன?

6. ஏக வசனத்தில் யாரையும் பேச வேண்டாம். ஆனா தலைப்பு பேசுமே அதை! ரெண்டு பேரு நடிச்ச படத்துல ஒற்றை மூஞ்சியும் பார்க்க சகிக்கலை. ‘கும்பிடுறேன் சாமி’ படம் பேரைச் சொல்லுங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்