ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

‘எதையும் பிளான் பண்ணிப் பண்ணணும்’னு வடிவேலு சொல்றது, சிரிக்கிறதுக்கு மட்டுமில்லை பாஸ். சிந்திக்கணும்! ஹோம்-வொர்க், கார்ட்டூன் சேனல் பார்க்கிறதுனு சிறுசுகளுக்கும், பார்ட்டிக்குப் போறது, பசங்களோட சுத்துறதுனு பேச்சுலர்ஸுக்கும், மாமியார் வீட்டுக்குப் போறது, சிலிண்டரைத் தூக்குறது, ஈ-பி பில் கட்டுறதுனு பெருசுகளுக்கும் வாராவாரம் ஆரவாரமான வேலைகள் எக்கச்சக்கமா இருக்கும். எல்லாத்தையும் ஒழுங்குப்படுத்திக்கிறதுக்கான வழிதான், ‘வீக்லி பிளானர்’ங்கிற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். பெயரிலேயே இருக்கே, ஒரு வாரத்தைத் திட்டமிடுதல்!

ஞாயிற்றுக்கிழமை ஹேங்ஓவராகிச் சரியும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால், சனிக்கிழமை சாயங்காலம் ஐந்து மணிக்கு அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணுங்க. திங்கள் முதல் வெள்ளிவரை செய்ய வேண்டிய வேலை, பார்க்க வேண்டிய சினிமா, சுற்ற வேண்டிய இடங்கள், வாங்க வேண்டிய பொருட்கள், போக வேண்டிய இடங்கள்... என அத்தனை விஷயங்களையும் பொறுமையாகப் பதிவுசெய்துகொண்டு கிளம்ப வேண்டியதுதான். ‘எது எது எந்தெந்த நேரத்தில் நடக்க வேண்டுமோ, அது அது அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டும்’ என்பதை உங்கள் பாக்கெட்டில் இருந்தபடியே எடுத்துக்கொடுக்கும் இந்த அப்ளிகேஷன். இதே அப்ளிகேஷனைத் தினமும் கடைப்பிடிக்கும் யோகா, வாக்கிங் போன்றவற்றைக் குறித்துக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அப்புறமென்ன? ‘அச்சச்சோ இன்னைக்கு ஸ்பெஷல் டெஸ்ட்டு இருக்கே?’னு குழந்தைகள் பதற வேண்டிய அவசியம் இருக்காது. ‘எத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னுமா அந்த வேலையை முடிக்கலை?’னு பாஸ்கிட்ட திட்டு வாங்க வேண்டிய வேலை இருக்காது. எதுக்கெடுத்தாலும், ‘எத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்...?’ என இழுக்கும் மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டிய கட்டாயமும் இருக்காது. ரொம்ப முக்கியமா, ‘இந்தத் தேதியில் இவன் வாங்கித் தர்றேன்னு சொல்லியிருக்கான் மச்சான்’னு அப்ளிகேஷன்ல பதிஞ்சு வெச்சிருக்கிற ‘பேச்சுலர் பார்ட்டி’க்கான தேதியைப் பார்த்தே, குஷியாகலாம்!

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.whatup.android.weeklyplanner

- கூகுள்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்