தலையிலும் டாட்டூ!

ளைஞர்கள் மத்தியில் இப்போது பிரபலமாகிக்கொண்டிருக்கும் புதுவரவு ‘ஹேர் டாட்டூஸ்’. நம் உடம்பில் நமக்குப் பிடிச்ச உருவத்தை பச்சைக் குத்திக்கொள்வது டாட்டூ. அதுபோல, தலைமுடியில் நமக்குப் பிடித்த உருவத்தை ஷேவ் செய்துகொள்வது ‘ஹேர் டாட்டூ’.

இதற்கு முதலில் நம் தலையில் மட்டும் கலர் சாயங்களைத் தூவி சின்னதாக ‘ ஹோலி’ கொண்டாட வேண்டும். பின்பு, நமக்கு நெருக்கமான ஒன்றையோ, நமக்குப் பிடித்த ஒன்றையோ, நம்மை விவரிக்கும் ஒன்றையோ, அதன் வடிவத்தில் ஷேவ் செய்துகொள்ளலாம். ரொம்ப சிம்பிள், டாட்டூ மாதிரி இல்லாமல் மாசமாசம் மாத்திக்கலாம். ஒரு வகையில் ரசனையையும் வெளிப்படுத்துது.

இப்படி, சமீபத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த கட்டிச்கா எனும் பெண்ணின் ‘உறங்கும் பூனை டாட்டூ’ இப்போது இன்ஸ்டா, ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் செம வைரலாகியுள்ளது. அநேகமா, இனி பலர் பொடனியில் இதே மாதிரி பூனை உறங்கிக்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. உங்களுக்கும் இதே மாதிரி பண்னணும்னு தோணுச்சுனா ‘பூனை’ பண்ணாதீங்க, புதுசா ஏதாவது பண்ணி அசத்துங்க...

- ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick