சொல்வதெல்லாம் பொய்!

மிழக முதல்வர் எல்லா இடங்களிலும் ஒரே விஷயத்தை அடி பிறழாமல் பேசுவதால், அது ஹோலோகிராம் இமேஜாக இருக்குமோ என சந்தேகிக்கிறது மத்திய உளவுத் துறை!

ஃபேஸ்புக்கில் 5,000 நண்பர்களைக் கொண்டு இருக்கும் ஆல்பி அவராங்காவிற்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி!

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஊழலில் மூழ்கிய கட்சிகள் என கருத்துத் தெரிவித்த அமித் ஷா, அந்தப் பட்டியலில் பா.ஜ.க. சேருவதே, அவர்களது தலையாய நோக்கம் என கருத்துத் தெரிவித்து இருக்கிறார்!

இரட்டை மெழுகுவர்த்திக்குப் பதிலாக இரட்டை இலைக்கு ஓட்டுக்கேட்ட சீமான், தொடர்ந்து தமிழ் இறைவி ஜெயலலிதாதான் என்றும் கூறினார்!

பாரிவேந்தர் தனக்கு ஒதுக்கிய 45 தொகுதிகள் மிகவும் அதிகம் என பா.ஜ.க. தலைமையிடத்திடம் தெரிவித்ததால், பாரிவேந்தர் கட்சியைக் கூட்டணியில் இருந்து விலக்கியது பா.ஜ.க!

கேப்டன் தலைமையிலான கூட்டணியை கே.ம.ந.கூ.வா. என எல்லோரும் அன்போடு அழைக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் வைகோ!

அசாருதீன், தோனி, சச்சின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களைத் தொடர்ந்து பர்த்திவ் பட்டேல் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட வேண்டும் என பர்த்திவ் பட்டேல் ரசிகர்கள் போர்க்கொடி!

ஜோதிமணிக்கு காங்கிரஸ் தொகுதி ஒதுக்காததால், ‘ஜோதிமணி திராவிட காங்கிரஸ்’ என்ற புதுக்கட்சியைத் தொடங்கி இருக்கிறார்!

- சத்யராணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick