சினிமால்!

துநாள் வரை வெர்ஜின் பையனாகவும், ஸ்கூல் பையனாகவும் நடித்து வந்த ஜி.வி.பிரகாஷ் அடுத்து சமூகக் கருத்துள்ள ஒரு படத்தில் நடிக்கிறாராம். ‘ஈட்டி’ படத்தைத் தொடர்ந்து விளையாட்டை மையமாக வைத்து ரவி அரசு இயக்கும் சீரியஸான படத்தில் நடிக்கிறார். இந்தியா முழுக்க நிலவும் சமூகப் பிரச்னைதான் கதைக்கருவாம். அது என்னங்க, அப்படி ஓர் சமூகப் பிரச்னை?

நிக்கி கல்ராணி நடித்துவரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ஹீரோ லாரன்ஸ்தான் படத்தின் டான்ஸ் மாஸ்டர். நிக்கியின் திறமையைக் கவனித்த லாரன்ஸ், மிகவும் கஷ்டமான ஸ்டெப்களை நிக்கிக்குக் கொடுத்து நன்றாக வேலை வாங்கியிருக்கிறாராம். மாஸ்டரின் இந்த அக்கறையால் நிக்கி கல்ராணி ஆனந்தக் கண்ணீர் விட்டாராம். இதுக்குமா?

இந்தி சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோயினாகக் கலக்கும் நடிகைகளில் ஒருவர்தான் ராணி முகர்ஜி. திருமணம் ஆனாலும் மாஸ் ஹீரோயின் படத்தில் நடிக்க வைக்க பலர் போட்டா போட்டி போடுகிறார்கள். ‘மர்தாணி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் ராணி. நல்ல வரவேற்பு பெற்ற அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க இருக்கிறது யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ். கதையைச் சொல்ல ராணி முகர்ஜியும் ஓகே சொல்லிவிட்டாராம். ராணி மகாராணி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்