முன்னாள் காதலி!

பாலிவுட்டில் இப்போது ஒரே பேச்சு ஹ்ரித்திக்-கங்கனா சண்டை பற்றித்தான்.  முன்னாள் காதலர்களான இவர்கள் சண்டக்கோழிகளாக மாறி, மாற்றி மாற்றி சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறார்கள். அதற்கு முன்பே இப்படி அடித்துக் கொண்ட முன்னாள் பிரேக்-அப் ஜோடிகள் இவர்கள்...

அபிஷேக் பச்சன்-கரிஷ்மா கபூர்: 1992-ல் அஜய் தேவ்கன்னோடு இருந்த ரிலேசன்ஷிப் முடிவுக்கு வந்த 1995-ல் அபிஷேக் பச்சனோடு காதல் தொடங்கியது கரிஷ்மாவுக்கு. இந்தக் காதல் கனிந்து இருவீட்டார் சம்மதத்தோடு நிச்சயதார்த்தம் வரைக்கும் போய் அந்த உறவு முறிந்து போனதால், எல்லாமே நின்று போனது. இப்போதும் அபிஷேக் பச்சனோ கரிஷ்மாவோ பழைய காதலைப் பற்றிக் கேட்டால் முகம் சுளித்தபடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார்கள்.

சல்மான் கான்-ஐஸ்வர்யா ராய்: பாலிவுட்டின் ஹிட் ஹாட் ஜோடி இது. சல்லு பாய் செம ப்ளே பாயாக வளைய வந்ததால், இவர்களின் சின்ஸியர் லவ் பிரேக்-அப் ஆனதாக சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால், விஷயம் அதுவல்ல. சல்லு பாய் செம ஆணாதிக்கவாதி. கோபத்தில் சில நேரங்களில் கை நீட்டி விடுவாராம். அந்த ஜிம் பாடி அடிச்சா இந்த வெல்வெட் பாடி தாங்குமா? அதான் பிரேக்-அப்பாம்.

ப்ரீத்தி ஜிந்தா-நெஸ் வாடியா: ஐ.பி.எல். சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரான முன்னாள் நடிகை ப்ரீத்திக்கும் அவரது காதலர் நெஸ்வாடியாவுக்கும் சண்டை ஆரம்பித்தது சின்ன ஈகோவில். மீடியாவுக்கு மாற்றி மாற்றி இருவரும் பேட்டிகள் தட்ட இன்னும் சிக்கலானது. இவ்வளவுக்கும் சினிமாவில் திரும்ப நடிக்கக் கூடாது என்ற சின்ன வாக்குவாதத்தைத்தான் இருவரும் ஊதி ஊதிப் பெருசாக்கி போலீஸ் ஸ்டேஷன் வரை போனார்கள். ‘தன்னை அடித்தார்’ என்று ப்ரீத்தியும், ‘தன் மேல் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்’ என நெஸ்வாடியாவும் சொன்னார்கள்.

அக்‌ஷய் குமார்-ஷில்பா ஷெட்டி: ஜோடியாக நடித்தபோது செம லவ்வில் இருந்த இருவரும் திடீரெனப் பிரிந்தார்கள். ஷில்பா செம ஹாட்டாய், ‘என்னை அவரோட தேவைகளுக்குப் பயன்படுத்திக்கிட்டு ட்விங்கிள் கன்னாவைப் பார்த்ததும் உதறித்தள்ளிட்டுப் போயிட்டார்’ என ஓப்பனாய் குற்றம் சொன்னார். ‘நான் அவரை லவ்வே பண்ணலை’ என்பது அக்‌ஷயின் பரிதாப ஸ்டேட்மென்ட்.

ஜான் ஆபிரஹாம்-ரியா சென்: மாடலிங் பண்ணிக்கொண்டு சின்னச்சின்ன ரோல்களில் பாலிவுட்டில் தலைகாட்டிய ஜான் ஆபிரகாமுக்கும் ரியாவுக்கும் கண்டதும் காதல். டேட்டிங்கில் பிஸியாக செலவிட்டவர்கள் திடீரெனப் பிரிந்தார்கள். ‘நான் விளையாட்டுப் பையனாம். அதனால் இந்தப் பிரிவு’ எனச் சொன்னார் ஜான். ‘எனக்கு என் சினிமா கேரியர்தான் முக்கியம்’ என்று சிம்பிளாய் இந்த ரிலேசன்ஷிப்பை பிரேக்-அப் செய்தார் ரியா. காலம் அப்படியே உல்ட்டாவானது. ஜான் ஆபிரகாம் இப்போது பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். வாய்ப்பு இல்லாமல் கொல்கத்தாவுக்கே போய்விட்டார். வங்காளம் மற்றும் ஒரிய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick