ஆஃப் த ரெக்கார்டு!

துருக்கியில் ஒரே இடத்தில் தான் இயக்கும் இரண்டு படங்களின் ஷூட்டிங்கையும் முடிக்க புத்த இயக்குநர் திட்டமிட, ஒல்லி நடிகர் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் எனச் சொல்லி ஷூட்டிங்கிற்கு ஆப்செண்ட் ஆகிவிட்டார் விரல் நடிகர்.

பன்ச் நடிகரின் சமீபத்திய படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், எப்படியாவது அடுத்த படத்தை ஓகே செய்யும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறாராம் அதன் இயக்குநர். ஆந்திராவின் பிரின்ஸ் நடிகரிடம் கதை சொல்ல முயற்சித்து வருகிறாராம்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தன் ரசிகர்களில் குறிப்ப்பிட்ட மாவட்டத் தலைமை மன்றத்தினர் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக அறிவித்து இருப்பது சூப்பர் நடிகருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் யாரும் இதுபோல மன்றத்தின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்க இருக்கிறாராம்!

ஹனி தயாரிப்பு நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே எல்லாப் படங்களிலுமே தங்கள் நிறுவனத்தின் பெயரைப் போட்டு படங்களை வெளியிட்டு வந்ததால், நிறுவனத்தின் பெயர் டேமேஜ் ஆகியது. அதனால் இனி நல்லப் படங்களை மட்டும் தேர்வு செய்து வெளியிட முடிவு செய்திருக்கிறதாம்!

காக்கா நடிகைக்கு வரும் பட வாய்ப்புகள் எல்லாமே இரண்டு நாயகி, மூன்று நாயகி உள்ள படங்கள்தானாம். இதனால் சோலோ நாயகி வேடம் இருந்தால் கூப்பிடுங்கள், சம்பளத்தைக்கூட குறைத்துக்கொள்கிறேன் எனக் கூறுகிறாராம்!

மகன் நடித்துள்ள காதல் படத்தை எப்படியாவது இந்தக் கோடை விடுமுறையில் வெளியிட தாடிக்கார அப்பா திட்டமிட, எல்லாத் தேதிகளிலுமே பல படங்களை வெளியிட தியேட்டர்கள் புக் பண்ணப்பட்டு விட்டதால், தன் மகன் படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் ரிலீஸைத் தள்ளி வைக்கும் நிலையில் இருக்கிறார் தாடி அப்பா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்