கிளப்புறாங்கய்யா பீதியை!

விஜய் தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார். ஓ.பன்னீர்செல்வம் ‘எம்.ஜி.ஆர் அ.தி.மு.க’ என்ற பெயரில் தனிக்கட்சித் தொடங்குகிறார் என வரலாறு காணாத அளவு வதந்திகளில் மிதக்கிறது வருகிற சட்டமன்றத் தேர்தல். அதில், சுவாரஸ்யமான சில வதந்திகள்!

‘அன்பார்ந்த வாக்காளர்களே... வேட்பாளர்களைவிட, அதிக வாக்குகளை ‘நோட்டோ’ பெற்றால், அந்தத் தொகுதியின் வேட்பாளர் இனி ஜென்மத்துக்கும் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர் மட்டுமல்ல, அவருடைய வாரிசுகளும் தேர்தலில் நிற்கும் தகுதியை இழப்பார்கள். எனவே, ‘நோட்டோ’வுக்கு அதிக வாக்குகளைச் செலுத்தி, அரசியலைத் தூய்மைப்படுத்துங்கள்’ என்று வாட்ஸ்-அப்பில் சுற்றிக்கொண்டிருக்கிறது ஒரு வதந்தி. அதாகப்பட்டது, ‘சிட்டிசன்’ க்ளைமாக்ஸில் ஊழல் செய்து ஊரைப் புதைத்த அரசியல்வாதிகளுக்கு அஜித் கொடுக்கச்சொன்ன தண்டனையை அப்படிக் கொஞ்சம், இப்படிக் கொஞ்சமுமாய் மாற்றி பொங்கல் வைத்திருக்கிறார்கள். மத்தபடி, ‘நோட்டோ’ என்பது தேர்தலில் நம்முடைய அதிருப்தியைப் பதிவுசெய்யும் ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்! #ஆஹாங்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்