கதை விடுறாங்க!

‘என்னைக் கல்யாணம் பண்ணணும்னா நீ இதைச் செய்தே ஆகணும்’ என்று திவ்யா, முன்வைத்த கோரிக்கையைப் பார்த்து மண்டை காய்ந்தான் பாலாஜி.- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

சண்முக சுந்தரம்: ‘வித்தியாசமா இருக்கும்னு சுடுகாட்டில் ஹனிமூன் கொண்டாடச் சொல்றியே... உனக்கே இது நல்லாயிருக்கா?’ என அவன் கேட்டதற்கு. ‘அதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ எனக் கூறி வாயில் புகை வர சிரிக்க ஆரம்பித்தாள் திவ்யா. ‘இவ்வளவு நாள் பேயையா லவ் பண்ணினோம்?’ என்று பீதியாகி அலறியடித்து ஓடினான் பாலாஜி.

புகழேந்தி: ‘என்னைக் கல்யாணம் பண்ணணும்னா சுப்ரமணியன் சுவாமி, அவர் கையால நமக்கு தாலி எடுத்துக் கொடுக்கணும்’ என்பதுதான் அவள் முன்வைத்த கோரிக்கை.

ஹசன்: அவள், அவனை கேப்டனின் பேச்சைத் தமிழில் மொழிபெயர்த்து சொல்லச் சொன்னாள்.

கார்த்திக்: அவள் இனிமேல் நீ டைம்பாஸ் புத்தகத்தில் வரும் லிட்டில் ஜான் கதையைப் படிக்கக் கூடாது எனக் கூறியதால் ஆடிப்போனான் பாலாஜி.

அப்துல்: அவள் மொட்டை மாடிக்குச் சென்று உச்சி வெயிலில் வற்றல், வடாம், துவைத்த துணிகளைக் காய வைக்குமாறு கூறினாள். அவள் சொன்னதை அப்படியே செய்த பாலாஜியின் மொட்டை மண்டை  உண்மையிலேயே மொட்டை மாடியில் அடித்த வெயிலில் காய்ந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்