கலாய் முன்னேற்றக் கழகம்!

புதுசு புதுசா நம் ஊரில் கட்சிகள் முளைச்சுக்கிட்டு இருக்கு. அதற்குப் பெயர் வைக்கவும் ரொம்பவே கட்சிக்காரர்கள் சிரமப்படுவார்கள். அவர்களுக்காகவே இந்தப் பெயர் பரிந்துரை. இந்தப் பெயர்களில் எதை வைத்தாலும் ஒரே நைட்டில் ஓஹோனு ஃபேமஸ் ஆகிடலாம்!

ஒ.ஓ.ம.க    -    ஒரேநாளில் ஓஹோனு மாறப்போகும் கட்சி.
நா.ந.ந.ந.க    -    நாட்டுக்கு நல்லது செய்யும் நல்லவர்கள் நலக் கட்சி.
ஓ.போ.சா.வி.க    -    ஒட்டுப் போடலைனா சாபம் விடும் கட்சி.
இ.போ.ஏ.போ.க    -    இறங்கிப் போகாமல் ஏறிப் போகும் கட்சி.
க.மூ.க.தெ.க    -    கண்ணை மூடினாலும் கனவில் தெரியும் கட்சி.
செ.த.செ.ந.பே    -    செல்ஃபி தட்டும் செல்வங்கள் நலப் பேரவை.
தி.இ.ஆ.ந.க    -    தில் இருக்கும் ஆம்பளைங்க நடத்தும் கட்சி.
ஆ.பா.வெ.பா.க    -    ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு கட்சி.
தொ.து.தொ.வி.க    -    தொண்டர்களைத் துவைத்துத் தொங்க விடாத கழகம்.
தி.தி.உ.சா.க    -    திடீர் திடீர்னு உருளவும் சாயவும் செய்யும் கழகம்.
நா.நெ.க    -    நாம் நெட்டிசன்கள் கட்சி.
க.க.தி.க    -    கலாய்த்தாலும் கண்டுக்காமல் திரிவோர் கழகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்