புரியுதா?

மிழ் சினிமாவில் புரியாத பாடல் வரிகளுக்கு அர்த்தம் சொல்லலாமா?

டங்கா மாறி ஊதாரி புட்டுகுனா நீ நாரி: டங்கா என்றால் தங்கம். ஊதாரி என்பது வீட்டில் உள்ள தங்கத்தை சேட்டுக் கடையில் அடகு வெச்சு ஊதாரித்தனமா செலவு செய்யும் ஆண்கள். புட்டுகுனா நீ நாரி, போதையில் கால் தவறி சாக்கடையில் விழுந்தால் நாறிடுவீங்க என்று சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்தைச் சொல்லும் அருமையான பாடல்.

ஓமஹசியா ஓஹயாலா: ஓ என்றால் ஓடுதல், மஹசியா என்றால் மத்தியானம். ஓஹயாலா என்றால் சீன மொழியில் கடல். மத்தியான வெளியில் கடற்கரையில் ஓடும் பெண்ணே என்று அர்த்தம் பாஸ்.

மக்காயலா மக்காயலா காயாவாகுவா: மக்காயலா என்றால் மக்கள். இங்கே இரண்டு முறை மக்காயலா வருவதால் இரு நாட்டு மக்கள். காயாவாகுவா என்றால் போரினால் உண்டாகும் காயம். உலகின் எந்த நாடும் சண்டை போடக் கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அன்பை வலியுறுத்தும் ஒரு பாடல்.

ஹசிலி பிசிலி ரசஹலி: ஹசிலி என்றால் சித்தர்கள் பயன்படுத்திய மூலிகைச் செடி, பிசிலி என்றால் அந்தச் செடியில் இருந்து வரும் ஒரு வகை பிசின். ரசஹலி என்பது அந்த மூலிகையையும் பிசினையும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் பித்தம், வாதம், கபம் தீரும் என்று சொல்லும் அற்புதமான மூலிகை ரகசியப் பாடல்.

அதாரு உதாரு: பொதுவாக வயதானவர்களுக்குக் கண் பார்வை சற்று மங்கலாக இருக்கும். தூரத்தில் வருவது யாரென்று தெரியாமல் அதாரு என்று கூப்பிடுவது வழக்கம். அப்படி விசாரிக்கும் பெருசுகளிடம் சிக்கினால் அப்பா நல்லா இருக்கிறாரானு ஆரம்பிச்சு கதை கதையாப் பேச ஆரம்பிச்சிடுவாங்க. இப்படிப்பட்ட ஆட்களிடம் இருந்து எஸ்ஸாக அவசர வேலை இருக்குனு பொய் சொல்றதுதான் பாஸ் உதாரு.

ஹேய் சுருக்கிரிக்கா முக்கா மொழம் போட்டு: மல்லி, ரோஜா, மரிக்கொழுந்துனு வகைவகையா விற்கும் ஆயாவிடம் நாம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தால் மீதி சில்லறைக்கு சுருக்குப் பையில் கையை விட்டுத் தேடும், சுருக்குப்பையில் சில்லறை இருக்கா என்பதே நாளைடைவில் சுருக்கிருக்கா என சுருங்கிவிட்டது. முக்கா மொழம் போடு என்பது பூவை முழங்கையால் முழம் போட்டு அளப்பது வழக்கம். அதுதான் பாஸ் இது.

உசுமு லரசே உசுமு லரசே யோ யோ: உசுமு என்றால் உசுப்புதல் அதாவது தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடுவது. யோ யோ என்றால் வாக்கிங் போவது, காலையில் சீக்கிரம் எழுந்திரிச்சு வாக்கிங் போயா என்று காதலி காதலனைப் பார்த்துப் பாடும் ஹெல்த் டிப்ஸ் பாடல்.

ஜிங்கிலியா ஜிங்கிலியா: ஜிங்கில் என்பது ஆங்கிலத்தில் சிங்கிள் எனவும் தமிழில் ஒற்றை எனவும் அர்த்தம். லியா என்றால் தான்சானியா மொழியில் வரியா என்று அர்த்தம். ஆகவே ஜிங்கிலியா, ஜிங்கிலியா என்பது ஒத்தைக்கு ஒத்தை வரியா என்று விஜய்யின் வீரத்தை பறைசாற்றும் ஒரு பாடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்