ஃபீல் பண்றாங்களாமாம்!

பாடல் காட்சிகளில் டான்ஸ் இல்லாம வெறும் காட்சிகளா அடுக்கி வெச்சு செய்வாங்களே... அதுக்குப் பேர்தான் மான்டேஜ் சீன். நம் தமிழ் சினிமாவில் எப்படியெல்லாம் செஞ்சுருக்காங்க. பார்க்கலாம்!

ஹீரோ கிறுக்குப் பிடிச்ச மாதிரி தனியா உட்கார்ந்து யோசிக்கும்போது சிகரெட் மெல்லக் கரைஞ்சு கையைச் சுடும்வரை சொரணை கெட்டவரா இருப்பார்.

திடீர்னு வைகோ மாதிரி நடைப்பயணம் கிளம்புவாங்க. பீச்சுல, ரோட்ல, மலைப் பிரதேசம்னு கண்ட இடத்திலேயும் வாக்கிங் போவாங்க. ஆணிக்கால் வராம இருந்தா சரி.

நகைச்சுவை சம்பந்தப்பட்டப் பாடல்களில் ஹீரோவைக் கண்டிப்பா நாய் துரத்தும். சும்மா இல்லை. ரோடு ரோடா விரட்டி விரட்டித் துரத்தும். யார் வீட்டு கேட்டிலாவது ஏறி தப்ப முயற்சி பண்ணும்போது நாய் வந்து பின்னாடி கடிச்சு வெச்சுடும்.

ஹீரோயினோட ஸ்கூட்டியில இவிய்ங்களே காற்றைப் பிடுங்கி விடுவாங்க. அப்பறம் அச்சச்சோ ‘இஃப் யூ டோன்ட் மைண்ட் என்கூட வாங்களேன். நான் ட்ராப் பண்றேன்’னு வம்பா லிஃப்ட் கொடுப்பாங்க. இப்படிப் பண்ணலாமா? தப்பில்லையா?

ஃபேமிலி சென்டிமென்ட் பாடலில் கல்யாணம் நடக்கும். உடனே வளைகாப்பும் நடக்கும். அப்போதான் கன்னத்தில் சந்தனம் தடவியிருப்பாங்க. உடனே ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்து தொட்டிலில் ஆடிக்கிட்டு இருக்கும். இது எல்லாமே ஐந்து நிமிடத்தில்.

அண்ணன் தங்கச்சியின் பாசத்தை விளக்கும் பாடலில் அண்ணன் ஓவரா சேட்டை செய்வார். தங்கச்சி தோளில் அடிக்கிறது, அம்மா, அக்கா ஜடையை ஒண்ணா கட்டி வைக்கிறதுனு செல்லமா விளையாடுவார்.

ஹீரோயின் கையில மருதாணி வெச்சிருக்கும்போது போன் வரும். போனை கழுத்துல வெச்சு அந்த சப்போர்ட்ல கடலை போடுவார். அநியாயத்துக்கு சிரிச்சு சிரிச்சுப் பேசும் அந்தப் பொண்ணு.

ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒண்ணா சேர்ந்து சீட்டு விளையாடுவாங்க. கூடவே கல்லாட்டமும் ஆடுவாங்க. யாராவது ஒருத்தர் சீட்டை ஒளிச்சு வெச்சிப்பாங்க, அதை அம்மா கரெக்டா கண்டுபிடிப்பாங்க.

ஹீரோ கேரியர் இல்லாத சைக்கிளைத்தான் ஓட்டுவார். சைக்கிள் முன்பக்க பாரில் ஹீரோயினைத் தூக்கி வெச்சு ஊரெல்லாம் சுற்றி வருவார்.

மழையில் செமையா நனைஞ்சு போயிருக்கும் ஒரு மரத்துக்குக் கீழே ஹீரோவைக் கொண்டுபோய் நிப்பாட்டுவாங்க ஹீரோயின். அப்போ மரத்தை லைட்டா உலுப்பிவிட ஹீரோ தொப்பலா நனைஞ்சு போவார். எத்தனைப் படத்துல இப்படிப் பார்த்திருப்போம்.

அன்னைக்கு தீபாவளியே இல்லைனாலும் வீட்டு வாசல்ல புஸ்வாணம் விடுவாங்க. கம்பி மத்தாப்பு சுத்துவாங்க, சங்கு சக்கரம் விடுவாங்க. பாம்பு மாத்திரை மட்டும்தான் கொளுத்த மாட்டாங்க.

அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆர்ம்ஸ் ரெஸ்லிங் நடக்கும். அண்ணன் ஒரு பக்கம் அமுக்க, தம்பி ஒரு பக்கம் அமுக்குவார். ஆனா கை மட்டும் அசையாம அப்படியே இருக்கும். விட்டுக்கொடுக்க மாட்டாங்களாமாம். இதை எத்தனை சரத்குமார் படத்துல பார்த்திருப்போம்.

அண்ணன், பெரிய அண்ணன், நாலு குட்டித் தம்பிங்க எல்லோரையும் ஒண்ணா ஈயச்சட்டி மேல உட்கார வெச்சு எண்ணை தேச்சுக் குளிக்க வைப்பாங்க. அதுல ஒருத்தர் எஸ்ஸாகி ஓட குடும்பமே அவரை விரட்டிப் பிடிச்சு குளிக்க வைக்கும்.

ஹீரோயின் குளிச்சிட்டுத் தலை துவட்டும்போது கண்ணாடிக்குள் ஹீரோ நிற்கிற மாதிரி கற்பனை பண்ணிப் பார்க்கிறது, அப்படியே கிஸ் பண்ண கிட்ட வந்து டக்குனு காணாமப் போறது, அய்யய்யோ முடியலப்பா!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick