அத்தனையும் நடிப்பா?

வ்வொரு நடிகருக்கும் நடிக்கிறப்போ குறிப்பிட்ட ஒரு பாடி லாங்குவேஜ் அவங்களையும் அறியாமல் வெளியே வரும் பாஸ். கவனிச்சிருக்கீங்களா?

சத்யராஜ் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டால் எடுக்கவே மாட்டார். அது சோகப்பாட்டாக இருந்தாலும் சரி. ரொமான்ட்டிக் பாட்டாக இருந்தாலும் சரி இரண்டு பாக்கெட்டுக்குள்ளும் கைகளை விட்டு ஃபீல் காட்டுவார்.

பேசும்போது ஒரு ஸ்டெப் முன்னாடி வந்து கேமரா பார்த்துக் குனிந்து, ஆனால் பார்வை தாளாமல் நேராக முறைத்துப் பார்த்துப் பேசுவது சூப்பர் ஸ்டார் வழக்கம். வெட்கம் வந்துவிட்டால் நகம் கடிப்பார். காலை வளைத்து வளைத்து குழந்தை போல ஓடுவார்.

விஜய் வெட்கப்படுவதுபோல நாக்கை வாய்க்குள் சுழற்றுவார். சந்தோஷ மூடில் இருந்தால் குதிகாலால் ஜெர்க் கொடுத்தபடி பேசுவார்.

அஜித் சிரிக்கும்போது தலையை இல்லை என்பது போல இடம் வலமாக ஆட்டுவார். அடிக்கடி கையை இடுப்பில் வைத்து முட்டுக் கொடுத்தபடி பேசுவார். 

பிரகாஷ்ராஜ் அடிக்கடி கை விரலால் மூக்கை இடம்வலமாகத் தடவிக்கொண்டு பேசுவார்.

விஷால் ரொமான்டிக் காட்சிகளில் கீழ் உதட்டை மொத்தமாகக் கடித்து தலையை ஆட்டி வெட்கப்படுவார். சண்டைக் காட்சிகள் என்றால் உடம்பைக் கபடி ஆட்டத்துக்குத் தயாராவது போல வளைத்துக்கொண்டு நிற்பார். 

கமல் உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் இரண்டு உதடுகளை வாய்க்குள் அதக்கிக்கொள்வார். (அவர் உதட்டைத்தான் பாஸ்!) முகத்தை சிரிப்பது போன்ற தயார்நிலைக்கு மாற்றி சடார் எனக் கண் கலங்க அழுவது அவர் ஸ்பெஷல். 

சிவாஜி முகத்தின் ஒவ்வொரு தசையையும் ஆட்டிக் காட்டுவார். புருவம், கன்னக்கதுப்பு என ஒவ்வொன்றுமே நடிக்கும். மொத்த எமோஷனையும் முகத்திலே காட்டிக்கொள்வதால் பாடி லாங்குவேஜ் என்பது இல்லை. ஃபேஸ் லாங்குவேஜ் தான். சின்ன யானை போல அழகாக நடப்பதை வேண்டுமானால் ஸ்பெஷல் கேட்டகிரியில் சேர்த்துக்கொள்ளலாம்.

எம்.ஜி.ஆர் அழும்போது முகத்தை மூடிக்கொள்வார். ‘ஐய்யோ கமலா என்னை மன்னித்துவிடு’ என ஹீரோயின் முகத்தைப் பார்க்காமல் மூடிக்கொண்டு வெம்புவார். வெட்கப்படும்போது உதட்டைக் கடிப்பார். ஹீரோயின் தோள்பட்டையைத் தடவிக்கொண்டே பேசுவது இவரது டெரர் மேனரிஸம்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick