ஒரு வாசகம்னாலும் திருவாசகம்!

ட்டோ வாசகங்களைக் கவனிச்சிருக்கீங்களே... அத்தனையும் அதகளமா இருக்கும்! சரி, இப்போதைய அரசியல் சூழலில் நம் அரசியல்வாதிகள், கட்சிகள், கூட்டணிகளுக்கு எந்தெந்த வாசகங்கள் பொருத்தமாக இருக்கும்?

வைகோ:வாழ்க்கையில் சில வாய்ப்புகள் வரும். சில வாய்ப்புகள் வாழ்க்கையையே தரும்!

கருணாநிதி:கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்!

ஓபிஎஸ்:சோர்ந்து போனாலும் ஊர்ந்து போகமாட்டேன்!

அன்புமணி ராமதாஸ்:‘My Dad’s Gift!’

ஸ்டாலின்:உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு!

அழகிரி:இடிப்பது நீ, துடிப்பது நான்!

விஜயகாந்த்:இருக்கும் வரை ரத்ததானம், இறந்த பின் கண்தானம், எப்போதும் தேவை நிதானம்!

ராமதாஸ்:தூண்டிலில் சிக்கிய மீனும், காதலில் சிக்கிய ஆணும் துடிப்பது நிச்சயம்!

கம்யூனிஸ்டுகள்: நடந்ததைப் பல முறை யோசிப்பதைவிட, நடப்பதை ஒரு முறை யோசி!

சீமான்:முருகன் துணை!

ஜி.கே.வாசன்:உங்களின் வழிச்செலவு எங்களின் வாழ்க்கைச் செலவு!

சரத்குமார்:சாகசம் செய்யுமிடம் சாலையல்ல. மெதுவாகச் செல்பவன் கோழையல்ல!

டி.ஆர்:மோதிவிடாதே மொத்தமும் கடன்!

பொன்.ராதாகிருஷ்ணன்: சுமக்க நானிருக்க நடைப்பயணம் ஏன்?

இதெல்லம் அரசியல்வாதிகளுக்கு... நமக்கு, ‘பத்து மீட்டர் இடைவெளிவிட்டு வரவும்!’ வாசகம்தான் பாதுகாப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்