காலம் மாறிப்போச்சு!

ரே விஷயம்தான்... ஆனால் அது அந்தக் காலத்தில் எப்படி இருந்தது, இந்தக் காலத்தில் எப்படி மாறியிருக்கிறது என்பதைப் பார்ப்போமா?

அந்தக் காலத்தில் வயலை உழுது தண்ணீர், உரம் போட்டு கடலை சாகுபடி செஞ்சாங்க‌. இப்போது போனும் ஒரு பொண்ணும் இருந்தால் போதும், கடலை சாகுபடி பண்றாங்க!

அந்தக் காலத்துல ஒரு நாளை ஆரம்பிக்கிறதுக்குப் புள்ளிவெச்சு கோலம் போடுவாங்க.. இப்ப ஸ்மார்ட் போனை ஓப்பன் பண்றதுக்கு அதே மாதிரி கோலம் போடுறாங்க!

கோயிலைச் சுத்திட்டு வரணும். அப்போதான் மனசு சந்தோசமா இருக்கும்னு அன்று கோயிலைச் சுற்றி வந்தாங்க‌. இன்று டெம்பிள் ரன் என்று சொல்லிவிட்டு உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஓடுறாங்க!

அந்தக் காலத்துல பஞ்சம் வந்தப்போ, எலி பிடிச்சு சாப்பிட்டிருக்காங்க... இப்போ ஐ.டி மக்கள் மெளஸ் பிடிச்சாதான் சம்பளம், சாப்பாடுனு சொல்றாங்க!

தலைவலிச்சா மாத்திரை போட்டுக்கப்பானு சொல்வாங்க பெரியவங்க. இப்போ கண் விழிச்சு டேப் பாத்துட்டு தலை வலிக்குது, கண் எரிச்சல்னு சொல்றாங்க!

உப்பு, கரி போட்டுப் பல் துலக்கினாங்க அந்தக் காலத்துல. இப்போ வாய்ல வைக்கிற பேஸ்ட்டா, வத்தக்குழம்பு பேஸ்ட்டானு கன்ஃபியூஸ் ஆகிற அளவுக்கு உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா, லவங்கம் இருக்கானு கேட்கிறாங்க!

ஜன்னலை மூடிட்டுப் படுடா, கொசு வரப்போகுதுனு சொல்வாங்க அந்தக் காலத்துல. இப்பெல்லாம் லேப்டாப் விண்டோஸ் ஷட்டவுன் பண்ணிட்டு படுன்னு சொல்றாங்க.இதைத்தான் மஹான் சசிக்குமார் மூடிட்டு படுங்கடா நொன்னைகளான்னு சொல்லிருக்காரு!

-சித்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick