அஞ்சாம் தேதியே மாசக்கடைசிதான்!

மாசமாசம் ‘மாசக்கடைசியை சமாளிக்கிறதே பெரிய பிரச்னையா இருக்கு’னு ஃபீல் பண்றீங்கதானே. உங்களுக்காகவே மாசக்கடைசியை சமாளிக்கிற வித்தையை சொல்லித் தரப்போறேன்.

பர்ஸ்ல இருக்கிற 500 ரூபாய் தாளையும், 1,000 ரூபாய் தாளையும் அநாவசியமா சில்லரையா மாத்திடவே கூடாது. சில்லரையா மாத்திட்டால் சின்னப்புள்ள மாதிரி எக்குத்தப்பா செலவு பண்ண ஆரம்பிச்சுடுவோம்.

சம்பளம் வாங்கினதும் ‘சரக்கடிக்கலாமா...’னு டீல் பேசிடவே கூடாது. ‘போதைக்கு பீர் வாங்கிக் கொடுத்தான் சூரி’னு யாரும் உங்களை எட்டாவது வள்ளலா சேர்க்கப்போறது இல்லை. குடி குடியைக் கெடுக்கும்.

காசு கைக்கு வந்ததும் ‘சிக்காஙொக்கா, கபாப், மக்ரோனி’னு காய்ஞ்ச புலி, கோழி பண்ணைக்குள்ள பாய்ஞ்ச மாதிரி மூணு நாளைக்கு சேர்த்து ஒரே வேலையில் சாப்பிட கூடாது. வேணும்னா, மூணு வேளைக்கு சாப்பிடலாம். ஹ்ம்ம்ம்...

டீ குடிக்கணும் போல இருந்ததுன்னா, கும்பலோட கும்பலோ ஒரே ஒரு டீயை மட்டும் குடிச்சுட்டுக் கிளம்பிடணும். அதை விட்டுட்டு சாவகாசமா உட்கார்ந்து சமோசா எடுத்து சாப்பிட்டு இருந்தால், மொத்த பில்லையும் உங்க தலையில் கட்டிடுவாய்ங்க.

ஏதாச்சும் ஸ்நாக்ஸ் சாப்பிடணும்னு தோனுச்சுனா தண்ணி குடிங்க, போர் அடிச்சா குப்புறப் படுத்துக் குறும்படத்துக்கு கதை எழுத ஆரம்பிங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் ரூமை விட்டு வெளியே மட்டும் போய்டாதீங்க.

சம்பளம் போட்ட ஐந்தாவது நாளிலிருந்தே மாசக்கடைசி ஆரம்பிச்சுட்டதா மனசைப் பக்குவப்படுத்திக்கோங்க. அப்போதான் பர்ஸை ஓப்பன் பண்ணவே கை கால் உதற ஆரம்பிக்கும்.

ஒருகட்டத்தில் சுத்தமா காசு இல்லாம போச்சுனா இருக்கிற எல்லா பேன்ட், சட்டை பாக்கெட்டிலும் கையை விட்டுத் தேடுங்க, கண்டிப்பா இரண்டு பஸ் டிக்கெட்டும், ஒரு பத்து ரூபாயுமாவது கிடைக்கும்.

இது எல்லாத்தையும் தாண்டி 30 நாள் இருக்கிற மாசத்தைக்கூட சமாளிச்சுடலாம், 31 நாள் இருக்கிற மாசத்தை சமாளிக்கிறது ரொம்பவே சிரமம். ஐ லவ் பிப்ரவரி.

பேச்சுலர்கள் நலன் கருதி...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick