என்னா வெயிலு!

மிழ்நாட்டையே கோடை வெயில், குனிய வைச்சு முதுகுல குத்துது. அதைச் சமாளிக்க சில கிரேசி ஐடியாக்கள்.

மீண்டும் ஐஸ் பக்கெட் சேலஞ்சை ஆரம்பித்து வைக்கலாம். சில்லுனு வைரலில் இருந்த மாதிரியும் ஆச்சு. வெயிலைச் சமாளிச்ச மாதிரியும் ஆச்சு.

‘ஜோக்கர்’ படத்து ஹீரோ மாதிரி பைக்கின் பின்னால் எல்லோரும் வெண்கொற்றக் குடையைக் கட்டிக்கொண்டு வலம் வரலாம். அவ்ளோ பெரிய குடை வாங்க காசில்லாவிட்டாலும் பரவாயில்லை. வாழை மரம் அல்லது பப்பாளி மரத்தை அப்படிக் கட்டிக்கொண்டு பைக் ஓட்டலாம்.

வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது தொப்பிக்குள் வாட்டர் பாக்கெட்டை வைத்துக்கொள்ளலாம்.  அக்குள் போன்ற பகுதிகளில் வாட்டர் பாக்கெட்டுகளைக் கட்டிக்கொண்டும் சூட்டைத் தணிக்கலாம்.

அப்படியே எல்லா ஏ.டி.எம்-மிலும் போய் மினி ஸ்டேட்மென்ட் எடுத்துவிட்டு வரலாம்.

கோயிலில் சூலாயுதத்தில் செருகப்படும் எலுமிச்சைப்பழங்களை மொத்தமாய் எடுத்து வந்து தலையில் தேய்த்து சூட்டைத் தணிக்கலாம்.

துவைத்த துணிகளைக் காய வைக்காமல் அப்படியே ஈரத்தோடு போட்டுக்கொண்டு ஆபீஸ் கிளம்பலாம். அடிக்கிற வெயிலில் ஆபீஸ் வரும்போது காய்ந்து போயிருக்கும்.

வாட்ஸ்-அப்பில் வலம் வரும் தர்பூஸ் ஹெல்மெட், பப்பாளி கிளவுஸ், தேங்காய் சிரட்டை செப்பல் என செய்து மாட்டிப்பார்த்து இயற்கையோடு வலம் வரலாம்.

இன்ஸ்டன்ட் அம்மன் பக்தனாகி கூகுள் மேப்பில் முண்டக்கண்ணி, நாகாத்தம்மன், பெரிய பாளையத்தம்மன், தண்டு மாரியம்மன் கோயில்களைத் தேடி அங்கு போய் கூழ் வாங்கிக் குடிக்கலாம். மஞ்சள் தண்ணி ஊற்றி விளையாடும் ஊர்த் திருவிழாக்களில் கலந்துகொள்ளலாம்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick