மொக்கைதான் இவர்கள் ஸ்பெஷல்!

தித்யாவில் ‘காமெடிக்கு நாங்க கேரன்ட்டி’, ‘ரகள மச்சி ரகள’, ‘ஹலோ பார்ட்னர்’னு பல நிகழ்ச்சிகள் செய்யும் குட்டிகோபியும், லோகேஷும் தங்களுடைய 100-வது எபிசோடை நோக்கி சைலன்ட்டாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அப்புறம் என்ன, அரட்டை அடிக்கலாம்ல!

‘‘ ‘மொக்கை ஆஃப் தி டே’ எப்படி ஆரம்பிச்சது?’’

‘‘காமெடிக்கு நாங்க கேரன்டி பண்ணினோம்ல, அப்போ அதுல நான் போலீஸா இருந்தா இவன் ஏட்டா இருப்பான். நான் முதலாளியா இருந்தா இவன் வேலைக்காரரா வருவான். நான் ஏதாவது சொல்லும்போது அதுக்கு மொக்கையா ஒண்ணு சொல்லுவான். அதைக்கேட்டு நான் இவனைப் போட்டு அடிக்கிறது, அப்படியே காம்போ செட் ஆகிடுச்சு.’’

‘‘ ‘அட டேய்’யை யாரு கண்டுபிடிச்சது?’’

லோகேஷ் உடனே, “இது இவன் ஏரியாவுல அடிக்கடி பேச்சுவாக்குல சொல்றது. அதை அப்படியே பாடி லாங்வேஜோடு யூஸ் பண்ண ஆரம்பிச்சான். முன்னாடில்லாம் எங்களை எங்கேயாச்சும் பார்த்தா, ‘ஆதித்யா டி.வி’னு தான் சொல்வாங்க. ஆனா, இந்த டயலாக் வந்ததுக்கு அப்புறம் ‘அட டேய்’னு சொல்றாங்க. ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா’ மாதிரி செம ரீச் ஆகிடுச்சு. செலிபிரிட்டீஸ்லாம் ‘அட டேய்’னு போட்டு அடிக்கடி ட்வீட் பண்ணுவாங்க.’’

‘‘ ஆமா, அடி அவ்வளோ தத்ரூபமா இருக்கே, ஒரிஜினலா?’’

‘‘ஜோக் நாங்கதான் எழுதுவோம். ஸ்டார்ட்டிங்ல சும்மாதான் நடிப்பேன். ஆனா, ஆறு ஏழு டேக் போயிடுச்சுனா, உண்மையா அடிச்சிருவேன்’’ என கோபியைப் பார்த்து சிரிக்கிறார் லோகேஷ். ‘‘எத்தனை வாட்டிதான்  மொக்கையைப் புதுசா கேட்கிற மாதிரியே ரியாக்‌ஷன் கொடுக்கிறது? சில நேரம், அவனே வந்து என்னடா ஒரு வாட்டிதான் அடிச்சிருக்கேம்பான். அது மட்டுமில்லாம, ஒருத்தன் மொக்கை ஜோக் சொல்லும்போது, ஒரு கேரக்டர் அவனை அடிச்சா போட்றா அவனைனு எல்லோரும் ஃபீல் பண்ணுவாங்க. பையன் அந்த மொக்கைக்கு அநியாய பில்ட்-அப் பண்ணுவான். ஒரு தடவை எங்க ஆபீஸுக்கு ஊரில் இருந்து ஒரு பையனும் பொண்ணும் புக் ஃபுல்லா ஜோக்ஸ் எழுதி எடுத்துட்டு வந்து இதையும் சொல்லுங்கன்னாங்க. டப்ஸ்மாஷில் நம்ம மொக்கையை நிறையப் பேர் பண்றாங்க. ஒரு பையன் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து, ஷோ மிஸ் ஆயிடுச்சுனா அவங்க அம்மாகிட்ட இன்னிக்கு என்ன போச்சுன்னு கேட்பானாம். சொல்லலைனா சண்டை போடுவானாம். செம்ம ஹேப்பி நாங்க.’’

“ ‘நானும் ரெளடிதான்’ சான்ஸ் எப்படி வந்தது லோகேஷ்?’’

‘‘சேனல்ல நம்ம பண்ற சேட்டையைப் பார்த்துதான் கூப்பிட்டாங்க. ஹைட்டா ஒரு பச்சை சட்டை வருவாரில்ல? அவர் பேர் ஆத்மா. அவர் ரோலுக்குதான் என்னைக் கூப்பிட்டிருந்தாங்க. ஆனா, அவர் என்னைவிட பயங்கரமா இருந்ததால அவரை எடுத்துக்கிட்டாங்க. அப்புறம் திடீர்னு ஒருநாள் போன் பண்ணி நாளைக்கே பாண்டிச்சேரி வாங்கனு சொன்னாங்க. சரி, ஆடிஷன்ல பேசின டயலாக்தான் நமக்குனு ஜாலியாப் போனேன். நாலு நாள் சும்மாவே உட்கார்ந்திருந்தேன். சரி, கதை முடிஞ்சுதுனு நினைச்சேன். ஆனா, நான் டயலாக் பேசாம வந்த ஒரு சீன் அவ்ளோ பேர் வாங்கிக் கொடுத்திடுச்சு. அந்த சீனை ‘மீம்’ டெம்ப்லேட்டா வெச்சு, ஃபேஸ்புக்ல செம ரகளை பண்றாங்க. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெரிய படத்தில் வரும் ஆர்டிஸ்ட்லாம்கூட உங்க ரோல் சூப்பர்னு சொன்னாங்க. விஜய் சேதுபதி சார் என்னைக் கூப்பிட்டு, நீங்க டி.வில ஷோ பண்றீங்கள்ல? சூப்பருங்கனு ரொம்பப் பாராட்டினார்’’  என்கிறார் லோகேஷ்.

குட்டிகோபி, “லோக்கல்ல இருக்கிற அக்கால்லாம் நம்மைப் பார்த்தவுடனே ‘அட டேய்’னு நான் பண்ற ஸ்டெப்பைப் போடுவாங்க. அவ்ளோ ரீச் ஆகியிருக்கு. ஒரு ஷோவிற்கு மூணு மொக்கை. ஒரு ஜோக். ஒரு லீட். ஒரு கன்டென்ட். அவ்ளோதான்.” 

‘‘அடுத்தது?’’

‘‘ ‘பண்டிகை’னு ஒரு படம் பண்ணிருக்கோம், ரெண்டு பேரும் சேர்ந்து. கிருஷ்ணா ஹீரோ. ‘சென்னை 28’ ஹீரோயின் விஜயலக்ஷ்மியோட ஹஸ்பெண்ட் பெரோஸ்கான்தான் டைரக்டர். ‘உல்ட்டா’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கோம்.’’

‘‘உங்களுடைய ஃபேவரைட் ஹீரோயின்?’’

லோகேஷ், “எனக்கு சமந்தா’’ என்றதும் குட்டிகோபி, ‘‘ ‘ஏக் தோ தீன் சார்’ பாட்டு பார்த்ததில் இருந்து எனக்கும் சமந்தா’’ என்கிறார் வழிசலுடன்.

‘‘பப்ளிக்குக்கு உங்களைப் பற்றித் தெரியாத விஷயம்?’’

கோபி, ‘‘நல்லவேளை கேட்டீங்க. எனக்கு வயசு 26, இவனுக்கு 24. ஸோ, நான்தான் சீனியர். இவன் பெருசா இருக்கான்கிறதனால எல்லோரும் நான் சின்னப் பையன்னு நினைச்சிக்கிறாங்க.’’

‘‘புதுசா வர்ற காமெடியன்ஸுக்கு உங்க அட்வைஸ்?’’

‘‘நாமளே புதுசுதான் பாஸ். நம்மளே அட்வைஸ் கேட்டுதான் வாழுறோம். சரி, கேட்கிறீங்களா? காமெடிக்கு வர்றவங்க, ஆரம்பிச்சு 20 செகண்டுக்கு ஒருதரம் ஆடியன்ஸை ரிப்பீட்டடா சிரிக்க வைக்கணும். அப்போ சிரிச்சிட்டா, அதுக்கு அப்புறம் நாம என்ன பண்ணினாலும் சிரிப்பாங்க’’ எனத் தங்களின் ரகசியத்தை உடைக்கிறார்கள் லோகேஷும், குட்டிகோபியும்.

-மு.சித்தார்த், படங்கள்: மா.பி.சித்தார்த்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick