சினிமா விடுகதை!

தெக்கத்தி டெர்மினேட்டர்... இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் படைப்புகள்தான் இந்த வார சினிமா விடுகதைகளுக்கான விடைகள் பாஸ்..!

1.
கருப்பழகனும் சிவப்பழகனும் சேர்ந்து நடிச்ச படம். கோபால கிருஷ்ணனுக்கு வேற பெயர் வெச்ச படம். மஞ்சக்குளிக்க வெச்ச அழகிகளையும் நஞ்சை புஞ்சைக் காட்டையும் தரிசிக்க வெச்ச படம். என்ன படம்?

2.
இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்னு சொன்ன சினிமா! பூவையே டைட்டில்ல சொன்ன சினிமா. கருப்புப் பூனைப் படத்துல சிவப்பு ஹீரோ நடிச்சாரே! அது என்ன?

3.
ரெண்டு பேரை அறிமுகம் செஞ்ச சினிமா. கப்பக்கிழங்கையும் சாம்பாரையும் மீன் குழம்பையும் ஒண்ணு சேர்த்த சினிமா.  சில்க்கையும் சேர்த்துக்கிட்டா படம் பேரு ஈஸியா தெரிஞ்சிடுமே?

4. தென்றலைப் புயலாக்கிய சேதி தெரியுமா?. அரச வம்ச பேர் கொண்ட ஹீரோவைப் பார்த்தோமே. ஏ.வி.எம் பேர் சொல்ல வந்த சினிமாவில் புதுமைக்கு நிறைய இடம் இருக்கு! என்ன படம் இந்தப் படம்?

5.
டீச்சரைக் காதலிக்கலாமா? கவிதை வாசிக்கலாமா? ஆட்டுக்குட்டியை மீட்டெடுத்த நல்மேய்ப்பன் கதை தெரிஞ்சா ஈஸியா சொல்வீங்கதானே?

6.
கறுப்பான பொண்ணு கருத்தாப் பேசுவா. கள்ளிப்பாலைக் குடிக்காம தப்பிச்ச கதையும் சொல்லுவா. பொன்னுத்தாயி பாட்டைக் கேட்டு மயங்காதவங்க தெக்கத்தி ஜில்லாவில உண்டா சொல்லுங்க!

7. குழந்தைகளுக்குப் பிடிச்ச ஆட்டம். வடக்கத்தி ஆளும் தெக்கத்தி ஆளும் சேர்ந்து நடிச்சா ஓட்டம். இந்தி பேசின சினிமாவில தமிழ் ஆளுங்களும் இருந்தாங்க. ஆனாலும் ஆட்டம் எதிர்பார்த்த ஓட்டம் இல்லாம வாட்டமா போச்சே! அது என்ன?

8. கிராமத்து ஜீன்ஸை திருப்பாச்சி அருவா கிழிச்ச கதை. காதலுக்குப் பேர் போன வார்த்தையை வெச்சும் கையைச் சுட்ட கதை. பெருந்தலைகள் சேர்ந்த சினிமாவுக்கு நேர்ந்த கதையை இமயமும் இப்போ வெறுப்பாரே..! என்ன படம்?

விடைகள்:

1. 16 வயதினிலே, 2. சிகப்பு ரோஜாக்கள் 3. அலைகள் ஓய்வதில்லை, 4. புதுமைப் பெண் 5. கடலோரக் கவிதைகள், 6. கருத்தம்மா 7. பொம்மலாட்டம், 8. தாஜ்மஹால்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்