என்னென்னமோ இலவசம்!

ரு பேன்ட் வாங்கினால் இரண்டு பேன்ட் இலவசம். சிக்கன் வாங்கினால் சிக்கன் 65 மசாலாதூள் பாக்கெட் இலவசம். அஞ்சு மனை வாங்கினால் அருவா மனை‬ இலவசம்னு கண்டதுக்கும் ஆஃபர் குடுக்கிறாங்க. அதுல சில கொலக்குத்து சலுகை ஆஃபர்கள் இவை!

பாளையங்கோட்டையில் பிரபல சிம்கார்ட் நிறுவனம் தனது புதிய கிளையைத் திறந்தாங்க, அப்போ அறிமுக சலுகையாக புது சிம் வாங்குறவங்களுக்கு பெட்ஷீட் இலவசமாக் கொடுத்திருக்காங்க. ஒருவேளை போர்த்திக்கிட்டு போன் பேசுறவங்களுக்காக இருக்குமோ?

திருப்பதியில் 8 லட்டு வாங்கினால் அதைக் கொண்டுபோக ஒரு பை இலவசம்னு ஆஃபர் குடுத்தாங்க. சரி அப்போ 7 லட்டு வாங்குறவன் எப்படிங்க கொண்டு போவான்?

கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் விசித்திரமான ஒரு ஆஃபர் கொடுத்தாங்க. இரண்டு லார்ஜ் சரக்கு வாங்கினால், ஒரு ஸ்மால் இலவசம். ஊரெல்லாம்  இதை போஸ்டரா அடிச்சு ஒட்டி குடிமகன்களை குஷிப்படுத்தியிருந்தாங்க. இதே மாதிரி ‘வேதாளம்’ ரிலீஸ் டைம்ல 7 பீர் வாங்கினால் ‘வேதாளம்’ படத்தின் டிக்கெட் இலவசம்னு இன்னொரு குரூப் சொன்னாங்க. ரெண்டு பேரும் நல்லா வருவீங்க.
 

வீனா லியா என்ற இந்தோனேஷியப் பெண் தன்னுடைய வீட்டை விற்பனை செய்ய விளம்பரம் செய்திருக்கிறார். அந்த விளம்பரத்தின் கடைசி பாராவில் ஒருவரியைச் சேர்த்திருந்தார். அது இதுதான். இந்த வீட்டை வாங்குபவர்கள் இலவசமாக என்னையும் திருமணம் செய்துகொள்ளலாம். இது ஒரு அரிய வாய்ப்பு. யாரும்  மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்கனு இமான் அண்ணாச்சி மாதிரி விளம்பரம் பண்ணியிருக்கார்.
 

ஹெல்மெட் கட்டாயம்னு சட்டம் வந்தப்போ பொள்ளாச்சியில் ஒரு மளிகைக் கடைக்காரங்க வித்தியாசமா ஒரு ஆஃபர் கொடுத்தாங்க, 25 கிலோ அரிசி மூட்டை வாங்கினால் ஒரு ஹெல்மெட் இலவசம். ஹெல்மெட் கடையை விட அரிசிக் கடையில் கூட்டம் கூடிடுச்சு. உங்க கடையில் சாம்பிள் அரிசி கிடைக்குமா ப்ரோ?
 
இதெல்லாம் சும்மா ஜுஜுபி. நடக்கப் போற எலக்‌ஷன்ல வோட்டுக்காக இதைவிட சூப்பரானா ஆஃபர்லாம் நம்ம அரசியல்வாதிகள் கொடுப்பாங்கனு சொல்றீங்களா?
 

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick