பெண் சிங்கங்கள்!

பைக் ஓட்டுறதோட மட்டும் இல்லாமல் பைக் ரேஸ் உலகத்தையே கலக்கி எடுக்கிற பெண் சிங்கங்கள் இவர்கள்!

அனா கர்ரஸ்கோ: ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் ரேஸிங் சாம்பியன். மோட்டோ 3 வகையில் மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பாயின்ட்டுகளைக் குவித்த முதல் பெண். ஜெயிப்பதற்காக உயிரையே பணயம் வைப்பவர்.

கட்ஜா போயன்ஸ்கன்: ஜெர்மனி வீராங்கனை. 250 சிசி ரோடு ரேஸிங் கேட்டகிரியில் உலகின் நம்பர் ஒன் சாம்பியன். இட்டாலியன் கிராண்ட் பிரிக்ஸ் சாம்பியன் என எல்லாப் பதக்கஙக்ளையும் கக்கத்தில் வைத்திருப்பவர். ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் 7108 கிமீ தூர ரேஸான ‘ட்ரான் சைபீரியா ரேலி’யில் கலந்துகொண்ட ஒரே பெண்.

ஜென்னி டின்மௌத்: இங்கிலாந்தின் நம்பர் ஒன் பைக் ரேஸர். ஆண்கள் மட்டுமே போய் கலக்கும் ‘ஐஸில் ஆஃப் மேன் டிடி’ எனப்படும் பொதுவழிப் பாதையில் கலக்கும் ஒரே பைக் ரேஸிங் பெண் என்ற சாதனையை கின்னஸில் பதிய வைத்திருக்கிறார். உலகின் எல்லாவகை சூப்பர் பைக்குகளையும் அனாயசமாய் தெறிக்கவிடும் ஜென்னிக்கு சைக்கிள் ரேஸில் கலந்து கொள்வது இன்னொரு ஹாபி.

எலீனா ரோசெல்: ஸ்பெயின் தேவதை. மோட்டோ 2-வில் இப்போதுதான் உலகின் கவனத்தை ஈர்த்துவரும் சுட்டி லேடி.  உலக சாம்பியன் பட்டங்களைப் பெறவில்லை என்ற போதிலும் இவரது பைக் ஓட்டும் ஸ்டைலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. ஒவ்வொரு முறையும் மயிரிழையில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடும் இவர் விரைவில் சாம்பியனாய் ஜொலிப்பார் பாருங்கள்!

மரியா காஸ்டெல்லோ: ‘ஐசில் ஆஃப் மேன் டிடி’ போட்டியில் கலந்து கொண்டு உலகின் மிக வேகமான பெண் என்ற பட்டம் பெற்றவர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவரின் ஆவரேஜ் ஸ்பீடு 114.73! கிராண்ட் பிரிக்ஸ் ரேஸ்களில் கலந்து கொண்டு சில்வர்களை அள்ளி வருவதில் கில்லாடி லேடி!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick