பாம்பு என்றால் இவர் நடுங்க மாட்டார்!

கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் பிரபலம் ஆக பாம்புதான் காரணம்னு நீங்க நம்புவீங்களா? என்னது... பிரபலமான்னு கேட்காதீங்க ப்ரோ. அங்கே நண்டு சிண்டுக்கெல்லாம் இவரை நல்லாத் தெரியும். மேட்டருக்குப் போகலாமா?

சுரேஷுக்கு சின்ன வயசுல இருந்தே பாம்புனா ரொம்பப் பிடிக்கும். 12 வயசு இருக்கும்போதே விஷம் உள்ள நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்திருக்கிறார். இப்படிப் பாம்பு பிடிச்சே ஏரியாவில் ஃபார்ம் ஆக, கேரளா அரசாங்கம் சுரேஷைக் கூப்பிட்டு வனப் பாதுகாவலர் வேலை கொடுத்திட்டாங்க. சுரேஷ் சும்மாவே ஆடுவார். பதவியும் கிடைச்சா...  பாம்புகளின் நிபுணராகிவிட்டார். யார் வீட்ல பாம்பு புகுந்தாலும் இவருக்குதான் போன் வரும். இதுவரை 30,000 பாம்புகளைப் பிடித்திருக்கிறார். அதில் 3,000 பாம்புகளிடம் கடியும் வாங்கியிருக்கிறார். அப்படிக் கடித்த பாம்புகளில் 300 பாம்புகள் கொடூர விஷத்தன்மை கொண்டதாம். ரொம்ப சீரியஸான கண்டிஷனில் ஆறு முறை ஐ.சி.யூ-வில் அட்மிட்டாகிப் பிழைத்திருக்கிறார். காரணம் அவர் பாம்பு பிடிக்கும்போது எந்த விதப் பாதுகாப்பு சாதனங்களையும் பயன்படுத்துவதில்லையாம். கேட்டால் குச்சி வெச்சுப் பிடிக்கிறதுல என்ன சார் கிக்கு இருக்கு என்றிருக்கிறார். பெரிய பெரிய பாம்புகளைக் கையில் பிடித்தபடி போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு அல்லு கிளப்புகிறார்.

‘எதுக்கு இப்படி ரிஸ்க் எடுக்குறீங்க?’ என்று கேட்டால், பாம்புகள் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு உண்டாக்கவும், அரியவகைப் பாம்புகளைப் பாதுகாக்கவும்னு சொல்லியிருக்கிறார். அதோடு மிகவும் அரியவகைப் பாம்பு இனங்களைக் கண்டுபிடித்து அதன் முட்டைகளை சேகரித்துப் பாதுகாப்பாக அடைகாக்கவும் ஏற்பாடு செய்கிறார். குஞ்சு பொரித்ததும் அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டுபோய் விட்டுவிடுவாராம். எல்லாத்தையும் விட ஹைலைட்டான விஷயம் 2013-ல் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கேரளாவுக்கு வந்தப்போ, சுரேஷ் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

நீங்க நிஜமாவே பெரிய ஆளுதான்யா!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick