படிப்பாளிகள்!

ரே ஒரு பி.பி.ஏ டிகிரி வாங்கவே எனக்கு நாக்குத் தள்ளுச்சு. ஆனா சில பேர் டிகிரி வாங்குவதையே  பொழுதுபோக்கா  வெச்சிருக்காங்க. அவங்கதான் கீழே. அரியர் வெச்சிருக்கிற பசங்க ஆத்திரப்படாம படிங்க.

ஸ்ரீகாந்த் ஜிக்கர்: இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மகா படிப்பாளி. காங்கிரஸ் கட்சிக்காரர். இவர் வாங்கிய பட்டங்களுடைய லிஸ்ட். மருத்துவம், சட்டம், ஊடகம். பொது நிர்வாகம், பொருளாதாரம், சமூகவியல், வணிகம், சமஸ்கிருதம், வரலாறு, ஆங்கிலம், தத்துவம், அரசியல் எனப் பல்வேறு படிப்புகளில் 20 முதுகலைப் பட்டங்களும், இலக்கியத்தில் டாக்டர் பட்டமும் வாங்கியிருக்கிறார். இதற்காக அவர் 42 பல்கலைக்கழகங்களில் தேர்வு எழுதியினாராம். அடுத்து ஐ.பி.எஸ் அதிகாரியானவர் திடீரெனப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் குதித்தார். இளம் வயதில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதோடு இவர் ஒரு சிறந்த ஓவியர். புகைப்படக் கலைஞர். தனக்காக ஒரு நூலகத்தை உருவாக்கி அதில் 52,000 புத்தகங்களைக் குவித்து வைத்திருந்தார். லிம்கா புத்தகத்தில் இவருடைய சாதனை இடம்பெற்றிருக்கிறது.

அசோகா ஜஃப்ணவி பிரசாத்: இவர் மிகப்பெரிய படிப்பாளி. பிறந்தது கோரக்பூர். பென்சில்வேனியா, ஹார்வர்ட், ஏல், கேம்பிரிட்ஜ்  எனப் பிரபலமான பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான வகுப்புகளை எடுத்திருக்கிறார். முதன் முதலில் மானுடவியலில் முதுகலைப் பட்டம் வாங்கியவர்  அடுத்து மனோதத்துவம்,  புவியியல்,வரலாறு, கணிதம், மருத்துவம். என வரிசையாக 19  பட்டங்களை வாங்கிவிட்டார். 56 வயதில் ஓய்வு பெற்றவர். தற்போது வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஹார்டியல் சிங் சைன்பி: இவர் வாழ்கையில் அதிகமாக செலவிட்ட நேரம் வகுப்பறையில்தானாம்.  வீட்டுக்குக்கூடச் செல்லாமல் எந்நேரமும் புத்தகமும் கையுமாக இருந்தவர் 15 முதுகலைப் பட்டங்களும் ஐந்து இளங்கலைப் பட்டங்களும், இன்னும் சிலவற்றையும் சேர்த்து 35 பட்டங்கள் வாங்கியிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர் கே. ராய் என்பவர் 22 முதுகலைப் பட்டங்களும்  ஐந்து ஆராய்ச்சிப் பட்டங்களும் மூன்று இளங்கலைப் பட்டங்களும் வாங்கியிருக்கிறார். ஒரே ஒரு டிகிரி வாங்குறதுக்கு இங்கே ஒவ்வொருத்தனும்  எவ்வளவு கஷ்டப்படுறான். இவங்க என்னடானா அப்ளிகேஷன் ஃபார்ம் மாதிரி அசால்ட்டா வாங்கிட்டுப் போறாங்க!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick