சினிமால்

ற்கெனவே ‘டேவிட்’ பட அனுபவத்தினால் வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்துவிட்டார் ஜீவா. தற்போது அந்த வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறார் தனுஷ். நடிக்கக் கேட்ட உடன் ‘வடசென்னை’ படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தாலும் எனக்குப் பெருமையே எனச் சொல்லி அந்த ரோலில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம் விஜய் சேதுபதி. நட்புக்கு மரியாதை!

ஏமி ஜாக்ஸன் ஊர் சுற்றும் பிரியை. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு நாட்டுக்குச் சென்று ஊர் சுற்றிப் பார்ப்பது வழக்கம். அப்படி, ஸ்பெயினில் இபிஸா தீவில் உள்ள பீச்சில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தபோது அவரின் கைப்பையை ஒரு ஆசாமி திருடிவிட்டாராம். அதிலிருந்த பாஸ்போர்ட், பணம், மொபைல் என எல்லாமே மிஸ்ஸாகி விட, ஸ்பெயினிலிருந்து இங்கிலாந்து தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்து, தற்காலிக பாஸ்போர்ட்டோடு நாடு திரும்பினாராம் ஏமி. ஸ்பெயின்லயும் பிக்பாக்கெட்டா?

‘36 வயதினிலே’ படத்தில் நடித்த ஜோதிகா அதன் பிறகு எவ்வளவோ கதைகள் கேட்டு, அதில் தேர்வு செய்த படம்தான் ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மாவின் படம். குடும்பத்தில் பெண்கள் மீது நிகழும் வன்முறைகளைப் பற்றிய படமாம். இதில் ஜோதிகாவுடன் முந்தைய தலைமுறை நடிகைகளான பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மகளிர் மட்டும் போல!

‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் நழுவவிட்டார் பிரகாஷ்ராஜ். அந்த வாய்ப்பை பிடித்துக்கொண்டார் கிஷோர். இப்போதோ பிரகாஷ்ராஜூக்குப் போகும் வாய்ப்புகள் எல்லாம் கிஷோரைத் தேடிப் போகின்றனவாம். காரணம், பிரகாஷ்ராஜ் படம் இயக்குவது, தயாரிப்பது என பிஸியாக இருப்பதுதானாம். த்ரிஷா இல்லனா நயன்தாரா!

சமீபத்திய ஹாட் டாக் செல்வராகவன் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிப்பதுதான். ஒரு சிலர் செல்வராகவன், சந்தானத்தை வைத்து காமெடி படம் எடுக்கிற நிலைக்கு வந்துவிட்டாரே எனவும், இன்னும் சிலர் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் புது ஹீரோ வெச்சு மெகா ஹிட் கொடுத்தவர் சந்தானத்தை வெச்சும் சூப்பர் ஹிட் கண்டிப்பாகக் கொடுப்பார் என்கிறார்கள். ஆனால் சந்தானத்தை வைத்துப் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்குகிறார் செல்வா என்கிறார்கள். புது காம்பினேஷன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்