சுட்ட படம்

காட்சிக்கு காட்சி காப்பி அடிக்காவிட்டாலும் சில படங்களில் மையக்கதை அப்படியே ஒன்றுபோல் இருக்கும். அப்படிப்பட்ட ஹிட்டான சுட்ட படம் இந்த வாரம். மனசைத் திடப்படுத்திக்கங்க பாஸ். இந்த வார சுட்ட படம் 1996-ல் ரிலீஸான அதிரிபுதிரி ஹிட் ‘காதல் கோட்டை’யே தான்! 1940-ல் எர்னெஸ்ட் லுபிட்ஸின் இயக்கத்தில் வெளியான ‘தி ஷாப் அரவுண்ட் தி கார்னர்’ என்ற படத்தின் லேசான தழுவல்தான் இப்படம்.

ஒரே இடத்தில் அருகருகே இருந்தாலும்...பேனா நடட்பிலேயே காதல் வளர்த்தாலும்...சண்டை போட்டுக்கொண்டு இவர்தான் நம் நேசத்துக்குரியவர் என்பதை க்ளைமாக்ஸில் உணர்ந்து சேரும் அதே ‘காதல் கோட்டை’ கதைதான் இந்த ஆங்கிலப்படமும். ஆனால், ட்ரீட்மென்ட்டும் கேரக்டர்களின் குணங்களும் மட்டும் கொஞ்சம் வேறு வேறு. சரி... ஒரிஜினல் படத்தின் கதை என்னவென்று பார்ப்போமா?

கதாநாயகன் ஆல்ஃப்ரெட் க்ராலிக், புட்டாபெஸ்ட் நகரில் இருக்கும் ஒரு தோல்பொருட்கள் விற்பனைக் கடையில் விற்பனைப்பிரதிநிதியாக பணி புரிபவன். பேரழகன். கொஞ்சம் குறும்புக்காரன். அந்தக் கடை உரிமையாளரான ஹியூகோ கடும்கோபக்காரர். அவரிடம் ஹீரோ க்ராலிக், அவனுடைய நண்பன் பைரோவிட்ச், பெபி கடோனா மற்றும் வடாஸ் என்ற பெண் பித்தனும் பணிபுரிகிறார்கள். குறும்புத்தனம் பண்ணினாலும் ஹீரோ வரம்பு மீறாதவன்.

ஹீரோ க்ராலிக்குக்கு பேனா நட்பின் மூலம் ஒரு புத்திசாலித்தனமான பெண் தோழி இருக்கிறாள். க்ராலிக் அந்த முகமறியா பெண்ணை நேசிக்கத் தொடங்குகிறான். க்ராலிக்கை தன் வீட்டு விருந்துக்கு முதலாளி ஹியூகோ அழைக்கிறார். பார்ட்டியில் எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தபோது விளையாட்டாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவருக்குள்ளும் தள்ளுமுள்ளு ஆகிவிடுகிறது. அடுத்த நாள் கடைக்கு வேலை கேட்டு க்ளாரா என்ற பெண் வருகிறாள். முதலாளி மீது கொண்ட கோபத்தால், ‘வேலை எல்லாம் காலி இல்லை போம்மா’ என்று அனுப்பி விடுகிறான். ஆனால், முதலாளி ஹியூகோ கடுப்பாகி அவளை வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார். நல்ல வேலைக்காரன் என்பதால், க்ராலிக்கை மன்னித்தாலும் அவன் தன்னை மதிக்கவில்லை என்ற ஈகோவால் அவனை எப்படியாவது வேலையை விட்டு அனுப்பிவிடலாம் என்ற முடிவில் இருக்கிறார் ஹியூகோ. தன் வேலைக்கு ஆப்பு வைக்க வந்த இந்தப் பெண்தான் தன் காதலி என்பதை உணராமல் அவளைக் கலாய்த்தபடி இருக்கிறான் க்ராலிக். எலியும் பூனையுமாக அவர்களுக்குள் சண்டை வருகிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் நெருங்குகிறது. க்ராலிக் தன் கனவுக்காதலியான பேனா நட்புப் பெண்ணை நேரில் சந்தித்து தன் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறான். பொது இடமொன்றில் சந்திக்க கடிதத்தின் வழி முடிவெடுக்கிறார்கள் க்ளாராவும் க்ராலிக்கும். அவளுக்கும் இவன்தான் தன் மனதைக் கவர்ந்தவன் என்பது தெரியாது. ஆனால், சந்திக்கச் செல்லும் நாளில் அவனை வேலையை விட்டே துரத்தி விடுகிறார் முதலாளி ஹியூகோ. காரணம் அவன் தன் மனைவியோடு தொடர்பு வைத்திருந்தான் என்று தவறாக நினைக்கிறார். மிகத்தாமதமாகத் தன் வேலையாள்தான் தன் மனைவியோடு தொடர்பு வைத்திருந்தான் என்பதை உணர்ந்தும் வருந்துகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்