“அஞ்சலிதான் எனக்குப் பிடிக்கும்!”

டப்பிடிப்புகளுக்கு இடையே மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ‘பிஸி’யாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பால சரவணனிடம் பேசினேன்.

“உங்களைப் பற்றி...?”

“மதுரைக்குப் பக்கத்தில் பரவை எனக்குச் சொந்த ஊர். பரவை முனியம்மா மூலமாக ஃபேமஸான அதே ஊர்தான். அழகர்கோவில்ல இன்ஜினீயரிங் படிச்சேன். வீட்டில் அப்பாவும், அம்மாவும் என்கூட நண்பர்கள் மாதிரி பழகுவாங்க. இல்லைனா நாலு வருசத்துல 34 அரியர்ஸ் வெச்சுருந்த என்னை வீட்டில் வெச்சு சோறு போட்ருப்பாங்களா?”

“முதன்முதலில் நடிக்கிற வாய்ப்பு எப்படி வந்துச்சு?”

“நான் காலேஜ் படிக்கிறப்போ மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கிட்டு இருந்தேன். அப்போ என்கூட விளையாடுற ரஃபீக் அண்ணன் பேச்சுவாக்கில் ‘வாய் மட்டும் கிழியக் கிழியப் பேசுறியேடா... விஜய் டி.வி-யில் ஏதோ ஆடிஷன் நடக்குதாம். அங்க போயிப் பேசு...’னு சொன்னார். ‘நடிப்பெல்லாம் நமக்கு வராதுண்ணே...’னு அவரிடம் சொல்லி சமாளித்தாலும், என்னுடைய காதலிகிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும் அவங்க ரொம்ப என்கரேஜ் பண்ணி என்னை அதில் கலந்துக்க வெச்சாங்க. முதலில் அதில் நுழைவதற்கே 15 நாட்கள் சீரியல்கள் பார்த்து சரியான பதில்களைச் சொல்லி அட்மிட் கார்டு வாங்க வேண்டும். எனக்கு ஊர் சுத்துறதுக்கே நேரம் பத்தாது. இதில் நான் எங்கே சீரியல் பார்க்கிறதுனு நினைச்சேன். என் காதலி ஹேமாவே பதில்களைச் சொல்லி என்னை ஆடிஷனுக்கு அனுப்பி வெச்சாங்க. பதினைஞ்சாயிரம் பேர் கலந்துக்கிட்ட அந்த ஆடிஷன்ல சிறந்த ஆண் பங்கேற்பாளர் விருது வாங்கினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்