“அப்பா சாயல் இருக்கத்தானே செய்யும்!”

‘சைவம்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகர் நாசரின் மகன் லுத்புதீன் பாஷா. விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘பறந்து செல்ல வா’ படத்தில் கதாநாயகன். அவரை மடக்கி ஒரு பேட்டி.

‘‘ ‘சைவம்’, ‘இது என்ன மாயம்’ படங்களில் இதற்கு முன்னர் நடித்திருந்தாலும் கதாநாயகனாக இது முதல் படம். என்ன வித்தியாசமான அனுபவம்?’’

‘‘சின்ன ரோல் பண்ணினாலும் சரி... ஹீரோவா நடிச்சாலும் சரி ஆக்டிங்கைப் பொறுத்தவரை ஒரே மாதிரிதான் இருந்துச்சு. ஆனா ஹீரோவா பண்றப்போ பொறுப்புகள் அதிகம். அதனால் ஷோல்டர்ல எப்பவும் ஒரு வெயிட் இருக்கிற மாதிரி உணர்வு இருக்கும். அது படத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமா கவனத்தோட ஈடுபட வெச்சது.’’

‘‘சினிமாவுக்கு உங்களை எப்படித் தயார்படுத்திக்கிட்டீங்க?’’

‘‘முதல் படமான ‘சைவம்’ நடிக்கும்போது எந்த ஒரு பயிற்சியுமே இல்லை. சினிமா பயிற்சி தர்றவருங்கிற முறையில் அப்பா என்கிட்ட கண்டிப்பா நீ ஏதாவது ட்ரெயினிங் கிளாஸ் போகணும்னு சொன்னார். ‘சைவம்’ முடியறப்போ டெல்லியில் தங்கி நாடக இயக்குநர் என்.கே.ஷர்மாகிட்ட ஒரு மாசம் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அப்புறம் நிறைய நடிப்புப் பயிற்சிக்கான க்ளாஸ் போனேன். இப்படித்தான் என்னை நானே  தயார்படுத்திக்கிட்டேன்.’’

‘‘வாரிசு நடிகர்னாலே ஒரு சிக்கல் இருக்கும். உங்களுக்கு எப்படி?’’

‘‘சொல்லப்போனா முதல் படமான ‘சைவம்’ பண்றப்போதான் அந்த பிரஷர் இருந்துச்சு. இப்போ அந்தப் பயம் இல்லை. சினிமா நல்லாவே பழகிருச்சு. நடிக்க ஆரம்பிச்சதிலிருந்து இப்போவரைக்கும் அப்பாவோட அடையாளம் என்மேல் இருக்கு. எல்லோருக்குமே இந்தப் பிரச்னை இருந்திருக்கும். ஏதாவது ஒரு படத்தில் ஆடியன்ஸ் கவனத்தை ஈர்க்கிற வரைக்கும் இந்த அடையாளம் இருக்கும். அதுக்கப்புறம் நமக்குனு தனி அடையாளம் வந்துரும். அப்படி ஒரு படம் அமையறதுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்.’’

‘‘சினிமா தவிர்த்து..?’’

‘‘சின்ன வயசிலேர்ந்தே எனக்கு ஆர்ட் ரொம்பப் புடிக்கும். அப்போ இருந்தே வரைவேன். சமீபத்தில்கூட கிராஃபிட்டி மேல சின்னதா இன்டரஸ்ட் இருக்கு. ராக் மியூஸிக் நிறையக் கேட்பேன். அது பிடிக்கும்கிறதால கிடார் கத்துக்கிட்டேன். நடிக்க வந்ததுக்கு அப்புறம் என் கவனம் முழுக்க நடிப்பில்தான்!’’

‘‘வாய்ப்பு கிடைச்சா சினிமாவுக்கு இசை அமைப்பீங்களா?’’

‘‘இல்லை. சினிமாவில் மியூஸிக் பண்ணனும்னு எந்த எண்ணமும் இப்போதைக்கு இல்லை.’’

‘‘பழைய படங்களை ரீமேக் பண்ற காலம் இது. வாய்ப்பு கிடைச்சா, எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பம்?’’

‘‘ரொம்பவே கஷ்டமான கேள்விதான். அப்பாவோட வில்லன் ரோல்ஸ்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘தேவர்மகன்’ படம் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அதனால் அந்த ரோல் கிடைச்சா கண்டிப்பா பண்ணுவேன்.’’

‘‘அடுத்த படம்?’’

‘‘இன்னும் கமிட் ஆகலை. கிடைச்சதும் ஓடிவந்து நானே சொல்றேன்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்