ஆஃப் த ரெக்கார்டு!

மெரிக்காவில் செட்டிலான கனிவான நடிகை, போரடித்ததால் இந்தியா வந்து சில மலையாளப் படங்களில் நடித்தார். இதனால் அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இப்போது இந்தியாவிலேயே செட்டிலாகி விட்டாராம் நடிகை!

நம்பர் நடிகை நாயகியாக தமிழ், தெலுங்கில் நடித்த படம் ஆந்திர தேசத்தில் மட்டும் முதலில் ரிலீஸானது. பெரிய அளவில் படம் ஓடாததால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம். இது தமிழ் வெளியீட்டையும் பாதிக்கும் என மிகுந்த கவலையில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்!

அரசியல் வாரிசு ஹீரோ படம் என்றதும் நடிக்க ஒப்பந்தம் ஆன கலர் நடிகை, அந்தப் படம் டிராப் ஆன பிறகு அதே இயக்குநர், தயாரித்து இயக்கும் வேறொரு படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். காரணம், இயக்குநர் சொந்த கம்பெனியில் படம் பண்ணுவதால், சம்பளம் பெரிசா கொடுக்க மாட்டார் என்பதுதானாம்!

மாயம் செய்த நடிகைக்கு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் இருந்தும் நிறைய அழைப்புகள் வருகிறதாம். ஆனால், இந்திப் படமே வேணாம் என அம்மாவும், நண்பர்களும் கூறிய அறிவுரையால் அதை அப்படியே தவிர்த்து விட்டாராம்!

பேய் அறிமுக நடிகை தமிழ் சினிமாவில் நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் என எல்லோருக்கும் முக்கியமான தருணங்களில் போன் செய்து வாழ்த்துக் கூறி, அவர்களோடு நட்பு வளர்க்கிறாராம். இப்படியே எல்லோருடைய குட் புக்கிலும் இடம் பிடித்து விட்டாராம். வாய்ப்புகளும் வீடு தேடி வருகிறதாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்