லைட்டா கண்ணைக் கட்டுதே!

தூங்கிட்டு இருக்கும்போது திடீர்னு முழிச்சு என்ன நடக்குதுனே புரியாமல் கூட்டத்தோடு கூட்டமாக வயலின் வாசிப்பவர்களை நிறையவே பார்த்திருப்போம். அவர்கள் சிக்குவது ஒருபுறம் இருந்தாலும் சிக்கவைத்தவர் சின்னாபின்னமாகும் அளவுக்கு அவர்களின் சில்மிஷங்கள் இருக்கும். கொஞ்சம் விழிக்கலாமா பாஸ்?

கூட்டத்தில் அமர்ந்திருக்கும்போது கண்ணசந்து தூங்கிப் போனவர்களையெல்லாம் எழுப்பிவிடுவதற்காகவோ என்னவோ திடீரென எல்லோரும் கை தட்டுவார்கள். என்ன ஏதெனப் புரியாமல் அரைத்தூக்கத்தில்  விழித்து கூட்டத்தோடு கூட்டமாக நாமும் கைதட்டிக்கொண்டிருப்போம். என்னவென விசாரித்தால் பேசிக்கொண்டிருந்தவருக்கு போன்கால் வந்திருக்கும். அடேய்களா..!

பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலோ தூங்கிப்போய்த் திடீரெனக் கேள்வி கேட்டதும் கணக்குப் பாடம் நடத்துவதுகூடத் தெரியாமல் ‘கிளாமிடோமோனஸ்’, ‘ஆஞ்சியோஸ்பெர்ம்’ எனச் சில டெம்ப்ளேட் அறிவியல் பதில்களைச் சொல்லி ஆசிரியருக்கே அல்லு கிளப்புவார்கள். அவர் அடுத்த நொடியே தெறித்து ஓடி ட்ரான்ஸ்ஃபருக்கு அப்ளை செய்துகொண்டிருப்பார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் பேசியதற்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டும்போது அதிகப்படியான மக்கள் சேவை மற்றும் வேலைப்பளுவால் சட்டமன்றத்திலும், பாரளுமன்றத்திலும் அமர்ந்து அசந்து தூங்கிக்கொண்டிருக்கும் மற்ற கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் எழுந்து மேசையைத் தட்டிவிட்டு சொந்தக்கட்சிக்காரர்கள் முறைக்கும்போது திருதிருவென முழிப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்