சொல்லுங்க பாஸ் !

சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட் விளையாடுறவங்ககிட்ட கேட்கணும்னு நினைச்ச கேள்விகள்தான் இதெல்லாம்...

கிரிக்கெட்ல ஒருத்தன் கேட்ச் பிடிக்க விட்டுட்டான்னா, அவனை ஸ்கிரீன்ல காட்டும்போதெல்லாம் dropped by னு  ஏதோ செயின் பறிச்ச திருடன் மாதிரி அவன் பேரையே போட்டு போட்டுக் காட்டுறீங்களே... போடுற எல்லா பாலுமே அவுட் ஆக்கத்தான் போடுறாங்க. அப்படினா பந்து ஸ்டெம்பை உரசிக்கிட்டு போயி ஸ்டெம்ப்ல படாம விக்கெட் மிஸ்ஸாகுதுனா அந்த பவுலர் பேரைப் போட்டு விக்கெட் மிஸ்டு பை னு ஸ்கிரீன்ல போடுவீங்களா?  அடப் போடணும்ல, அதானேங்க நியாயம்?

கிரிக்கெட் சாதனைகள்னு போடும்போது ‘இந்த கிரவுண்டில் இடதுகை ஆட்டக்காரராக களம் இறங்கி எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 34 ரன்களுக்கு மேல் எடுத்த ஜோடிகளில் தனது பங்காக 22 ரன்களுக்கு மேல் குவித்த ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 21 வயதுக்குக் குறைவான வலதுகை பந்துவீச்சு பழக்கமுள்ள வீரர்களின் பட்டியலில் 24-வது இடத்தை சமன் செய்துள்ளார்’னு போடுறீங்களே... ஆமா இதுக்குப் பேருதான் சாதனைகளோட டேட்டா கலெக்‌ஷனா? இந்தச் சாதனையை ஆர்டராக ஞாபகம் வெச்சு சொல்றதே, ஏன் படிக்கிறதே... பெரிய சாதனைதான்யா!

சப்ஸ்டியூட் பிளேயர் யாராச்சும் கேட்ச் பிடிச்சு விக்கெட் ஆக்கினா யாருக்காக இவர் விளையாடுகிறாரோ அவரோட பேரைப் போடுறீங்களே, அதுவே ரன்னர் வெச்சு ஒருத்தர் ரன் அடிக்கிறாருனா ரன்னர் பேரையும் போடணும்ல. என்னைக்காவது போட்டுருக்கீங்களா மக்கழேய்ய்ய்...

பேட்ஸ்மேன்  ஃபோர் அடிச்சார்னா அதை ‘பவுண்டரி’ங்கிறாங்க. சிக்ஸ் அடிச்சா சிக்ஸர்னு சொல்றீங்க. ஓகே. ஆனா பவுண்டரீஸ்னு தனியா லிஸ்ட் போட்டு ஃபோரையும் அதில் போடுறாங்க, சிக்ஸையும் அதில் போடுறாங்க. ஏதாவது ஒண்ணைத்தானே வைக்கணும்.

இந்தக் கேள்விதாங்க ரொம்பநாளாவே கேட்கணும்னு நினைச்சேன். ஃபோர் அடிச்சா ஃபோர்னு சொல்றீங்க. சிக்ஸ் அடிச்சா சிக்ஸர்னு ஏன் சொல்லுறீங்க. சிக்ஸ்னுதானே சொல்லணும்? அப்படினா ஃபோர் அடிக்கிறவங்கல்லாம் தொக்கா, இல்லை தக்காளித் தொக்கானு கேட்கிறேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்