கடுப்பேத்துறாங்க!

வாழ்க்கைங்கிறது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கறதில்லை. ஆனா, சில கடுப்புகள் மட்டும் எல்லா ஆண்கள் வாழ்க்கையிலேயும் பொதுவானது. அப்படிப்பட்ட பொறுமையைச் சோதிக்கும்  கடுப்புகள் என்னன்னா...

ஒன்றரை அடி சைஸ்ல உள்ள பிளாட்ஃபார்ம்ல நாம அவசரமா நடந்து போய்க்கிட்டு இருக்கும்போது, ஜென் நிலையில் ஸ்லோமோஷன்ல நடந்துபோற கேரக்டர் நமக்கு முன்னாடி வழிவிடாமப் போகும்.

சூப்பர் ஃபிகர் எதிர்ல இருக்கும்போது நாம வாங்கிக் குடிக்கிற காபி மிகச்சரியா 100 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் இருக்கிறது தெரியாம வாய்ல ஊத்தி புண்ணாக்கி பல்பு வாங்குவோம்.

கூட்டம் அதிகமான பஸ்ல மெஷின்ல சிக்கின கரும்பு மாதிரி நம்ம உடம்பு வெவ்வேறு பக்கம் எக்குத்தப்பா சிக்கியிருக்கும்போது, ஹை டெசிபல்ல மொபைல் அலறும். அவசர அவசரமா எடுத்துப்பார்த்தா, கஸ்டமர் கேர் காலா இருக்கும்.

அரைத்தூக்கத்துல மொபைல் ரெண்டு தடவை முகத்தில் விழுந்த பின்னாடியும் அடாவடியா நோண்டி, அப்புறம் கீழே விழுந்ததுகூட தெரியாமத் தூங்கியிருப்போம்.

கடைசி வாய் சாப்பாட்டில் மிளகாயைக் கடிச்சு ஜிஞ்சர் தின்ன மங்கி மாதிரி தண்ணி தேடி ஓடினவங்க எத்தனை பேருன்னு ஒரு கருத்துக்கணிப்பு நடத்துனா, 110 சதவிகித வாக்கு உறுதி.

வீட்ல ஒரு ரூம்ல நுழைஞ்சுட்டு, எதைத்தேடி வந்தோமோ அதையே மறந்துட்டு ‘என்னாச்சு’ விஜய் சேதுபதி ரேஞ்ச்ல குழம்பித் திரும்பியிருப்போம்.

கழுத்துல கத்தி வைக்கும்போது நமக்கோ அல்லது சலூன்காரருக்கோ தும்மல் வந்து, அதன்பின்னான திக் திக்கான நிமிடங்களை அநேகமா நாம எல்லோரும் கடந்து வந்திருப்போம்.

இன்டர்வெல்லின்போது வாய்ல சிக்கின பாப்கார்னைப் படம் முடியறவரைக்கும் நாக்கால எடுக்க மல்யுத்தம் பண்ணிருப்போம்.

இப்படிப் பல விசயங்கள் எல்லார் வாழ்க்கையிலேயும் பாரபட்சமே இல்லாம நடந்து கடுப்பைக் கிளப்பிருக்கும். அப்படிப்பட்ட பொறுமையிழந்த தருணங்களின்போது, பொறுமையா ஒரு கிளாஸ் தண்ணியைக் குடிச்சிட்டு உட்காரும்படி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்