கதை விடுறாங்க!

பேய் படம் பார்த்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த விக்கி, சுவிட்ச் ஆஃப் செய்த தன் மொபைலிலிருந்து ரிங்டோன் வந்ததைக் கவனித்தான்...

- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

விஜய்: அப்போதுதான் தெரிந்தது, அவன் ஒன்பது கிரங்களிலும் உச்சம் பெற்றுவிட்டான் என்று. ஏனென்றால், ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவனுக்குதான் மொபைலை ஆஃப் பண்ணினாலும் ரிங் வரும்.

முருகவேல்: அந்தப் பேய் படத்திலும் இப்படி ஒரு காட்சி வந்தது என்பதால், மறுபடியும் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டுத் தூங்கினான்.

இளங்கதிர்: அது ஒண்ணும் இல்லை. ஸ்விட்ச் ஆஃப் பண்ணாலும் அலாரம் அடிக்கும் என்பதை தெரிஞ்சுக்கிட்டான். அப்பறம் என்ன அலாரத்தை ஆஃப் பண்ணிவிட்டுக் குப்புறப்படுத்துத் தூங்கிவிட்டான்.

ராஜேஷ்: அதை எடுத்துப் பார்த்தபோது அவன் பார்த்த படத்தில் வந்த பேய் உருவம் அவன் மொபைலில் தெரிவதைப் பார்த்தான். திடீரென அதிலிருந்து கூர்மையான நகங்களுடன் இரத்தம் சொட்ட சொட்ட இரண்டு கைகள் வந்து அவனுடைய கழுத்தைப் பிடிக்க நெருக்கும்போது கண் விழித்தான் விக்கி. அடச்சே... கண்டெதெல்லாம் கனவா, இனிமேல் நைட் நேரத்தில் பேய்ப் படமே பாக்கக் கூடது என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

கெட்டவன்: உடனே இந்தக் காட்சி ஏற்கெனவே வேறு படத்தில் வந்துவிட்டது. அதனால் கதையை மாத்துங்க என டைரக்டரிடம் கூறினான், நடிகர் விக்கி.

வால்டர்: விக்கி, திகிலோடு எழுந்து மொபைலைக் காதில் வைத்ததும் ‘ஏன்டா உன் கேர்ள் ஃப்ரெண்டுக்கு பயப்படுவே, ஆனா என்னைப் பார்த்து பயப்பட மாட்டியா? நான் மொக்கப் பேய்னு எதுக்குடா ஸ்டேட்டஸ் போட்டே?’ என்ற குரல் கேட்டது. பயத்தில் டவுசரை நனைத்தான் விக்கி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்