பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரசியமான பதில்கள்...
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வீரலெட்சுமி விலகல்.... உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன?

திலீபன்: இவங்க ஏன் கோவிச்சிட்டுப் போறாங்க. தொழில்ல பொறுமைதானே அவசியம். ( ‘மருதமலை’ பட காமெடி மொமென்ட்)

அஜ்மீர்: வாழ்க்கையில் லட்சுமி (அதிர்ஷ்டலட்சுமி) வர்றதும் போறதும் சகஜம்தானே...?

கார்த்திக் குமார்: சைதை தமிழரசி தாக்கப்பட்டார் செய்தி மாதிரிதான் இருக்கு இந்த வீரலெட்சுமி விலகல்னு சொன்னதும். # சிரிப்பு தாங்க முடியலை.

முகமது வின்சென்ட் ஹரிஹரன்: இதுவும் வைகோவோட ராஜ தந்திரமா இருக்குமோ..?

பூபதி: கிளிக்கு ரெக்க முளச்சுடுத்து, பறந்து போச்சே சே சே சே.

பிரபு சேகர்: வீரலெட்சுமி இன்று முதல் விலகியலெட்சுமி என்று அழைக்கப்படுவார்.

சங்கடத்துக்கும் தர்மசங்கடத் துக்கும் என்ன வித்தியாசம்?

திலீபன்:  பஸ் ஏறலாம்னு பஸ் ஸ்டாப்புக்குப் போறப்போ, நம்மைத் தவிர எல்லோரும் பொண்ணுங்களா நிற்கிறது சங்கடம். அந்த நேரம் பார்த்து பிச்சைக்காரர் வருவது தர்மசங்கடம். (ஒரு பத்து ரூபாயாவது கொடுக்கலைனா மானம் போயிருமுல்ல)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்